இன்ஸ்டாகிராமில் காதல்..நேரில் சந்தித்த போது வந்த ட்விஸ்ட்! என்னாச்சு தெரியுமா?

Man Makes Girlfriend Online To Find Out It Was His Wife : ஒரு இளைஞர், இன்ஸ்டாகிராமில் காதலை வளர்த்து வந்திருக்கிறார். அவரது காதலியை நேரில் பார்க்க சென்ற நிலையில், அங்கு ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 7, 2025, 06:21 PM IST
  • இன்ஸ்டாவில் வளர்ந்த காதல்
  • இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
  • என்னாச்சு தெரியுமா? இதோ தகவல்
இன்ஸ்டாகிராமில் காதல்..நேரில் சந்தித்த போது வந்த ட்விஸ்ட்! என்னாச்சு தெரியுமா?

Man Makes Girlfriend Online To Find Out It Was His Wife : இணையத்தின் வைரலாகும் விஷயங்கள் பல, சினிமாவில் நடப்பதை விட ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இருக்கின்றது. இதுபோன்ற விஷயங்களை படிக்கும்போது, இப்படி எல்லாம் கூட இந்த உலகில் நடக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. இது போன்ற செய்திகள், சில சமயங்களில் நகைச்சுவையாகவும் சில சமயங்களில் கோபத்தை தூண்டும் வகையிலும் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Instagramல் காதலை வளர்த்த நபர்..

உலகின் எந்த ஒரு மூலையிலும் இருக்கும் ஒருவரை கனெக்ட் செய்ய உதவும் சமூக வலைதளங்களில் ஒன்று, இன்ஸ்டாகிராம். இதில் டீன்-ஏஜ் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலர் இருக்கின்றனர். எந்த ஒரு சமூக ஊடகம் இருந்தாலும் அதில் மக்கள் ஏமாற்றப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. ஒரு சிலர் இதை வைத்து தங்களை ஒருவர் ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை கூட அறிந்து கொள்கின்றனர்.

இந்த இன்ஸ்டாகிராம் தளத்தில்தான், மத்திய பிரதேசத்தில் இருக்கும் குவாலியர் நகரை சேர்ந்த ஒரு இளைஞர் காதலை வளர்த்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருக்கும் ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் பேசி காதலை வளர்த்து வந்திருக்கிறார். அந்த பெண்ணும் இவரிடம் நன்றாக பேசியிருக்கிறார். 2 மாதங்களுக்குள் இவர்களின் காதல் வாட்ஸ் ஆப் வரை சென்றது. பின்னர், அந்த பெண்ணிடம் இவர் தான் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து நேரில் சந்திக்க சென்ற போது, அந்த இளைஞருக்கு தூக்கி வாரி போட்டிருக்கிறது.

மனைவியின் வலையில் சிக்கினார்..

23 வயது பெண் ஒருவர், 2021ஆம் ஆண்டில் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். அந்த நபர் ஒரு தனியார் கம்பெணியில் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான சில நாட்களில் தனது கணவரின் நடவடிக்கைகளில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரது கணவர் இரவில் செல்போன் பார்ப்பது, செல்போனை தன் அருகிலேயே வைத்துக் கொள்வது, மனைவியிடம் இருந்து விலகி இருப்பது என்று இருந்திருக்கிறார். இது அந்த பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மனைவி வைத்த டெஸ்ட்..

தனது கணவரின் உண்மை முகம் குறித்து அறிந்து கொள்ள அவர் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார். அதற்காக, அவர் ஒரு பொய்யான சமூக வலைதள கணக்கை உருவாக்கி, தனது கணவருடன் வேறு பெண்ணின் பெயரில் பேச ஆரம்பித்திருக்கிறார். கொஞ்ச நாளில் இவர்கள் வாட்ஸ் ஆப்பிலும் பேச ஆரம்பித்து இருக்கின்றனர். 2 மாதங்களில் தனது கணவரின் நம்பிக்கையை பெற்ற இவர், அவர் குறித்த விஷயங்களை கேட்க ஆரம்பித்திருக்கிறார். அதில் அந்த கணவர், தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் தான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஒரு வழியாக, நேரில் மீட் செய்யலாம் என்று அந்த பெண் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கணவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். சொன்ன இடத்திற்கு வந்த கணவனுக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்துள்ளது. இத்தனை நாட்களாக தனது மனைவிதான் வேறு ஒரு பெண்ணின் பெயரில் காதலியாக வந்தார் என்பது தெரிந்து அந்த கணவர் கோபத்தில் சண்டை போட்டிருக்கிறார். இவர்களின் சண்டை நீளவே, அருகில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கின்ற்னர். 

இதையடுத்து இருவருக்கும் இடையே அதிகாரிகள் 1 மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்திருக்கின்றனர். போலீஸார் இதையடுத்து எந்த சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் விட்டிருக்கின்றனர். இந்த செய்தி, தற்போது இணையவாசிகள் இடையே வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | வைரல் வீடியோ: ரூ.90 லட்சம் எடுக்க வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்! அதிர்ச்சியடைந்த காசாளர்!

மேலும் படிக்க | மருமகளையே திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News