Viral news: கட்டுப்பாட்டை இழந்த metro, கடவுளாய் வந்த திமிங்கல சிலை, தடுக்கப்பட்ட விபத்து!!
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரத்தில், மெட்ரோ ரயில் தனது இறுதி மெட்ரோ நிலையத்தில் நிற்காமல், கோளாறு காரணமாக தொடர்ந்து பயணிக்க, ஒரு திமிங்கலம் அதை தடுத்து நிறுத்தி ஒரு பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளது.
புது தில்லி: உலகம் முழுவதும் அன்றாடம் பல விபத்துக்கள் (Accidents) நடக்கின்றன. இவற்றில் ஏராளமான மக்களும் இறக்கின்றனர். அதே சமயம், மிகப் பெரிய விபத்துக்களில் கூட சிலர் மரணத்தை வென்று விடுகின்றனர்.
நெதர்லாந்தின் (Netherlands) ரோட்டர்டாம் நகரத்திலும் இதேபோன்ற ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஒரு மெட்ரோ ரயில் தனது இறுதி மெட்ரோ நிலையம் அதாவது ஹால்டை அடைந்தது. ஆனால் சில இடையூறுகள் காரணமாக, ஓட்டுனரால் அதை பிளாட்பாரத்தில் நிறுத்த முடியவில்லை. இதற்குப் பிறகு நடந்ததைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்திற்கு ஆளானார்கள்.
மெட்ரோ (Metro) இறுதியாக அந்த நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. இந்த நிலையத்தைத் தாண்டி மெட்ரோ ரயில் பாதையும் இல்லை. இந்த மெட்ரோ நிலையம் ரோட்டர்டாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் ஒரு மாபெரும் திமிங்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
நடந்த விபத்தில், ஓட்டுநரால் மெட்ரோவை நிறுத்த முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த மெட்ரோ ரயில், அதே லைனில் நகர்ந்து நிலையத்தைக் கடந்தது சென்றது. ஆனால் முன்னால் ரயில் பாதை எதுவும் இல்லை. முன்னேறிச்சென்ற மெட்ரோ ரயில் முன்னிருந்த திமிங்கல மீன் சிலை மீது மோதியது.
ALSO READ: காதல் தோல்வியால் இவர் தாடி வைக்கவில்லை, தன்னைத்தானே மணந்து கொண்டார்: Viral ஆகும் pics!!
சிலையின் மீது மெட்ரோ ரயில் (Metro Train) தாக்கியபோது அதில் ஒரு டிரைவரும் இரண்டு பயணிகளும் இருந்தனர். அவர்களைத் தவிர, 50 க்கும் மேற்பட்டோர் கீழே நின்று கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த நேரத்தில், திமிங்கலத்தின் வால் அனைவரின் உயிரையும் காப்பாற்றியது. மெட்ரோ ரயில் மீன்களின் இரண்டு வால்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. இதன் மூலம் மெட்ரோ ரயில் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்படாமல் காப்பாற்றப்பட்டது.
இப்போது பொறியாளர்கள் திமிங்கலத்தின் வாலில் மாட்டியுள்ள மெட்ரோ ரயிலை எவ்வாறு எந்த வித சேதமும் இல்லாமல் அகற்றுவது என்று யோசித்து வருகின்றனர். நிர்வாகமும் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மெட்ரோ நிலையத்தில் உள்ள தடையில் மெட்ரோ ஏன் நிற்கவில்லை என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
எப்படியும், அந்த திமிங்கல சிலைக்கு அனைவரும் தற்போது நன்றி கூறி வருகிறார்கள். அழகுக்காக அமைக்கப்படட் அந்த சிலை, இப்போது பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. ஒரு பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR