Wimbledon வெற்றியை பரிசு கொடுத்து கொண்டாடும் ஜோகோவிச்; வீடியோ வைரல்
ஜோகோவிச், 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது அவரின் புகழ் மேலும் அதிகரிக்க காரணம் என்றாலும், ரசிகைக்கு அவர் கொடுத்த பரிசும் அவரது புகழை மேலும் அதிகரித்தது...
புதுடெல்லி: விம்பிள்டன் 2021 இறுதிப் போட்டியில் சென்டர் கோர்ட்டில் 6-7, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் உலக நம்பர் 1 நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி சரித்திரம் படைத்தார். அவர் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது அவரின் புகழ் மேலும் அதிகரிக்க காரணம் என்றாலும், தனது ரசிகைக்கு அவர் கொடுத்த பரிசும் அவரது நல்ல மனதை வெட்ட வெளிச்சமாக்கியது.
போட்டியின் வெற்றிக்குப் பிறகு, அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பு, ஜோகோவிச் டென்னிஸ் மைதானத்தில் ஒரு ஓரத்தில் இருந்த தனது டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து குட்டி ரசிகைக்கு பரிசாக அளித்தார். பார்வையாளர்களின் ஆரவார மகிழ்ச்சி கூச்சல்களால் அந்த குட்டிப் பெண் பிரமிப்படைந்திருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக சிறப்பாக போட்டிகளில் விளையாடிய ஜோகோவிச், ஒரேயொரு செட்டை மட்டுமே இழந்தார். இறுதியில், இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம், அவர் ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடாலின் சாதனைகளை சமன் செய்தார். இந்த சாதனைக்கு பிறகு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோகோவிச், தனது இரண்டு கடுமையான போட்டியாளர்களையும் பாராட்டிப் பேசினார்.
பெடரர் மற்றும் ரஃபேலின் சாதனைகளுக்கு சமமாக வந்துவிட்டதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நோவக் ஜோகோவிச், “இதன் பொருள் நாங்கள் மூன்று பேரும் சாதனைகளை இத்துடன் நிறுத்த மாட்டோம் என்பதே” என்று தெரிவித்தார்.
"நான் ரஃபேல் நடால் மற்றும் ரோஜருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் டென்னிஸ் விளையாட்டின் மிகப் பெரிய ஜாம்பவான்கள் மற்றும் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டு மிக முக்கியமான வீரர்கள்” என்றும் ஜோகோவிச் தெரிவித்தார்.
”இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு அவர்கள் தான் காரணம். வலிமையாகவும், உடல் ரீதியாகவும், தந்திரோபாயமாகவும், மன ரீதியாகவும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் எனக்குக் காட்டினார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இது நம்பமுடியாத பயணமாகும், இந்தப் பயணம் இங்கேயே நின்றுவிடாது” என்று நோவாக் தெரிவித்தார்.
ஃபெடரர் மற்றும் நடால் இருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் சாதிக்காத யுஎஸ் ஓபன் காலண்டர் ஸ்லாம் போட்டிகளில் கலந்துக் கொள்ள ஜோகோவிச்சிற்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும். ஜோகோவிச் இதுவரை 61 பட்டங்களும், நடால் மற்றும் பெடரர் முறையே 57 மற்றும் 54 பட்டங்களும் வென்றுள்ளனர்.
Also Read | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR