Viral Video: தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து குரங்கு அடித்த கும்மாளம்!!
பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்தால் மாணவர்களுக்கு தான் அச்சம்...எனக்கென்ன? என அவர் நாற்காலியில் அமர்ந்து கும்மாளம் போட்ட குரங்கின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
குவாலியர்: குரங்குகள் விளையாட்டுத்தனமான மற்றும் குறும்புத்தனமான உயிரினங்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இதற்கான ஒரு நல்ல உதாரணமாக, சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் (Madhya Pradesh) குவாலியரில் ஒரு குரங்கு ஒரு அரசுப் பள்ளிக்குள் பதுங்கியது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த குரங்கின் வீடியோவில், அந்த குரங்கு, பள்ளி தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து விளையாடுவதைக் காண முடிகிறது.
குவாலியரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குள் ஒரு குரங்கு பட்டாளம் நுழைந்ததை அடுத்து இந்த சம்பவம் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் இருந்த ஒரு குரங்குக்கு, தலைமை ஆசிரியரின் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், தலைமை ஆசிரியரின் நாற்காலியில் அமர்ந்தது அந்த குரங்குக்கு மிகவும் பிடித்திருந்தது என்பது தெளிவாகிறது. அங்கிருந்து வெளியேற அந்த குரங்கு (Monkey) மறுப்பதையும் காண முடிகின்றது.
பள்ளியைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் குரங்கை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்கு எந்த பலனுமில்லை. தன்னைச் சுற்றியுள்ள பரபரப்புக்கு செவிசாய்க்காமல், குரங்கு பின்னர் நாற்காலியில் சுற்றப்பட்ட பிளாஸ்டிக்கை கிழித்தெறிய செல்கிறது.
ஒரு ஊடக அறிக்கையின்படி, பள்ளியின் ஊழியர்கள் குரங்கை அச்சுறுத்தி அங்கிருந்து அகற்ற முயன்றனர். எனினும், சிறிது நேரம் கழித்து, அந்த குரங்கு தானாகவே அங்கிருந்து குதித்து அலுவலகத்திலிருந்து வெளியே ஓடியது.
ஜூன் மாதத்தில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவத்தில், டெல்லி மெட்ரோ ரயிலின் ஒரு பெட்டியில் குரங்கு பயணிகளுடன் அமர்ந்திருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியது (Viral Video). ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ கிளிப்பில், அந்த குரங்கு முதலில் மெட்ரோ ரயிலில் சுற்றித் திரிவதைக் காண முடிகிறது. இறுதியில் அந்த குரங்கு ஒரு பயணிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தது.
ALSO READ:அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜிம்னாஸ்டிக் செய்யும் பூனையின் வீடியோ வைரல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR