Viral Video : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியாேக்கள், நம்மை பல சமயங்களில் பயமுறுத்துவதுண்டு. அந்த வீடியோக்கள் தேவையற்ற செயலாகத்தான் இருக்கும். இதை, அந்த வீடியோ எடுப்பவர்களும் தெரிந்தேதான் செய்வார்கள். இதை பார்ப்பவர்களும், “இது ஒரு வீண் வேலை” என்று தெரிந்து கொண்டுதான் பார்ப்பார்கள். இதை பதிவிடுபவர்கள், நெகடிவாகவாவது யாரையேனும் இந்த வீடியோ சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் போடுவார்கள். இதுவும் அவர்கள் நினைத்தது போல வெளியாகி, வைரலாகி விடும். அப்படி ஒரு பெண் செய்த செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ: 


பலர், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தங்களது பாதுகாப்பையே துச்சமாக நினைத்து சில ஸ்டண்ட் வேலைகளை செய்கின்றனர். அப்படி, சீனாவிலும் ஒரு பெண் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். 


தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு பெண், ஓடும் ரயிலின் விளிம்பில் நின்று கொண்டு தன் உடல் முழுவதையும் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கிறார். இதை, ரயிலுக்குள் இருக்கும் ஒருவர் Zoom செய்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். திடீரென யாரும் எதிர்பாராத வகையில், ஒரு மரக்கிளை அந்த பெண்ணை அடிக்கிறது. இதையடுத்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் நபர் சத்தமாக கத்திவிட்டு அந்த வீடியோவை ஆஃப் செய்கிறார். 



அதன் பிறகு நடந்தது என்ன?


அந்த பெண்ணின் நிலை என்ன ஆனது என்பது குறித்து சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. அதன்படி, அடுத்த ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டதாகவும், பயணிகளில் சிலர் அந்த பெண்ணை தேடி சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண் பெரிதாக அடியேதும் படாமல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு புதரில் மாட்டியிருந்த அவரை, சில பயணிகள் சேர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | வித்தியாசமான முறையில் புஷ்பா படம் பார்க்க வந்த ரசிகர்! வைரலாகும் வீடியோ!


மேலும் படிக்க | நடத்துனரிடம் சண்டையிட்ட தாய்..டிக்கெட் எடுக்க சொல்லி கதறி அழுத மகன்! வைரலாகும் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ