)
Viral Video Chinese Delivery Boy Breaking Down : “பரமா..படிடா” என்று மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் ஹீரோவை பார்த்து மணிவன்னன் பேசியிருப்பார். இது எமோஷனல் காட்சி என்றாலும், பின்னாளில் அறிவில்லாமல் பேசுபவர்களுக்கு அறிவுரை சொல்லும் மீம் டெம்ப்ளேட்டாக இந்த காட்சி உருவானது. ஆழ்ந்து பார்த்தால், நாம் கல்வியை அடிப்படை ஆயுதமாக வைத்துக்கொண்டாலே கண்டிப்பாக நம்மால் நினைத்த விஷயங்களை சாதிக்க இயலும். இங்கு ஒரு இளைஞரையும் அவரது ஆசிரியர்கள் அப்படி படிக்க சொல்லியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் பேச்சை கேட்காததால் தனக்கு என்ன ஆனது என்று அந்த இளைஞர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சீன இளைஞர்:
சீனாவை சேர்ந்த அந்த இளைஞர், சில நாட்களுக்கு முன்பாக இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், அழுதுகொண்டே பேசும் இவர், தான் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாகவும், இதனால் இப்போது வேலையில் சிரமப்படுவதாகவும் பேசியிருக்கிறார். இவர் இப்போது டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார்.
தனக்கு வாழ்வில் இன்னொரு சான்ஸ் கிடைத்தால், அதில் கண்டிப்பாக கஷ்டப்பட்டு படிப்பேன் என்று பேசுகிறார். தனது ஆசிரியர்கள் எவ்வளவு சொல்லியும், அடம் பிடித்து பள்ளியில் இருந்து ட்ராப் அவுட் ஆனதாகவும், இதனால் இப்போது ரொம்ப கஷ்டமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
வைரல் வீடியோ!
“இப்போது நான் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நாய் போல உழைக்கிறேன், ஒரு வினாடி கூட ஓய்வெடுக்க நேரமில்லை. இருந்தாலும் எனது அடிப்படை தேவைகளை பார்த்துக்கொள்ள கூட எனக்கு கிடைக்கும் சம்பளம் போதவில்லை.
எனது பெற்றோருக்கு தேவையான விஷயங்களை என்னால் செய்ய முடியவில்லை. என்னாலும், நான் நினைத்தது போல் வாழ முடியவில்லை. இது என் இதயத்தையே நொறுக்குகிறது. ஆனால் என்னால் அதை பற்றி பேச கூட முடியவில்லை” என்று பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவானது, படிப்பறிவு வேண்டாம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் பலரது அறிவுக்கண்களை திறந்து வைக்கும் வகையில் உள்ளது. இவரை பார்த்தாவது, படிப்பு வேண்டாம் என்று நினைப்பவர்கள் திருந்த வேண்டும் என்பது பலரது எண்ணமாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ