வேலைக்கு சென்று, ஓயாமல் உழைத்து அந்த மாத இறுதி நாள் அல்லது முதல் நாளில் சம்பள தொகையை வங்கி கணக்கில் பார்க்கும் போது அவ்வளவு இன்பமாக இருக்கும். உழைத்த தொகையை பார்ப்பதற்கே நமக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதே, வெறுமென நடந்து போய் கொண்டிருக்கும் போது திடீரென உங்கள் மீது பண மழை பொழிந்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? அப்படி ஒரு சம்பவம்தான் தற்பாேது நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வானில் இருந்து கொட்டிய பணம்!


வானில் இருந்து பண மழை கொட்டிய இந்த நிகழ்வு, செக் நாட்டில் நடந்துள்ளது. அனைவரும் அமைதியாக அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்க. திடீரென்று வெகு தூரத்தில் பறந்து வந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று அனைவர் மீதும் பண மழையை பொழிய ஆரம்பித்தது. உடனே அனைவரும் ஓடி போய் பணத்தை சேகரிக்க ஆரம்பித்து விட்டனர். அது மட்டுமன்றி, அந்த பணங்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்கள். ஹெலிகாப்டரில் வந்து பண மழையை பொழிய வைத்தது யார்? அவர் அப்படி செய்ததற்கான காரணம் என்ன? இங்கே தொடர்ந்து பார்க்கலாம். 


மேலும் படிக்க | வெறும் கையால் பாம்பை பிடித்து கெத்து காட்டிய சிங்கப்பெண்-தீயாய் பரவும் வீடியாே!


இவர்தாங்க அந்த நல்ல மனுஷன்..!


செக் நாட்டை சேர்ந்த சமூக வலைதள பிரபலம், கமில் பார்டோசெக். இவர், ஒன் மேன் ஷோ எனும் படத்தை தயாரித்து வழங்கியுள்ளார். அந்த படத்தை ப்ரமோட் செய்வதற்காக புதிய உத்தி ஒன்றை கடைப்பிடித்துள்ளார். தன் படத்தில் வரும் ஒரு QR Code-ல் ஒரு தகவல் மறைந்துள்ளதாகவும் அதை யார் கண்டுபிடித்து கொடுக்கிறார்களோ அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக தருவதாகவும் அவர் அறிவித்திருந்தார். ஆனால், அந்த QR Code-ல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை பார்த்த இவர், இந்த QR Code போட்டியில் பங்கு பெற்ற சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் தனியாக மெயில் மூலம் இன்னொரு புதிர் போட்டியை வைத்துள்ளார். இதை கண்டுபிடித்தால், ஒரு லொகேஷன் தெரியும். அதை கண்டுபிடித்து வருபவர்களுக்கு பரிசு கிடைக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். அந்த QR Code-ல் உள்ள இடத்தை கண்டுபிடித்து சென்றவர்கள் மீதுதான் பணமழை பொழிந்துள்ளது. 



 


நெட்டிசன்கள் விமர்சனம்:


போட்டியாளர்கள் மீது பண மழை பொழிந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், பல வகையிலான நெகடிவ் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். போட்டியில் பயன்படுத்தப்பட்டிருந்த QR Code, மக்களுக்கு உதவி புரியும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு உரியது என கூறப்படுகிறது. இதனால், மக்கள் பணத்தை எடுத்து இவ்வாறு பண மழை பொழிவது சரியா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சிலர், இப்படி பணத்தை வீணாக செலவழித்தற்கு அதை நல்ல வகையில் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | மெட்ரோவில் தொங்கியபடி செல்லும் பெண்கள்! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ