தேர்தலில் வாக்களிக்கும் போன்று வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசி வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த வீடியோவானது சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. 


இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது.