Watch: இசையால் வாடிக்கையாளரை கவரும் `ஸ்வீட் கார்ன்` வியாபாரி...!
இனிப்பு சோளம் தயார் செய்யும் பத்திரத்தில் எளிமையான இசையை வாசித்து வாடிக்கையாளரை கவரும் `ஸ்வீட் கார்ன்` வியாபாரி...!
இனிப்பு சோளம் தயார் செய்யும் பத்திரத்தில் எளிமையான இசையை வாசித்து வாடிக்கையாளரை கவரும் 'ஸ்வீட் கார்ன்' வியாபாரி...!
இந்தியாவில் பிரபலமாகி வரும் உணவுப்பண்டங்களில் ஒன்று இனிப்பு சோளம் (sweet corn). உப்பு, மசாலா மற்றும் எலுமிச்சை சாருடன் தயாராகும் இனிப்பு சோளத்தின் சுவைக்கு இந்த பரந்த உலகில் நூற்றுகணக்கான மக்கள் அடிமையாக உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இனிப்பு சோளத்திற்கு அடிமையாக இருப்பவர்களை பார்த்திருப்போம். அதை விற்கும் வியாபாரியிடம் தங்களின் மனதை பறிகொடுத்த வாடிக்கையாளர்களை பார்த்ததுண்டா..?. அதுவும் நிஜம் தான்.
கோயம்புத்தூரில், ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் (Brookefields mall) உணவு சிற்றுண்டி வியாபாரம் செய்து வருகிறார். அவர் 'இனிப்பு சோளம்' தயாரிக்கும் பாத்திரத்திலேயே இசையை உருவாக்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை, டிஜிட்டல் விற்பனையாளரான கார்த்திக் ஸ்ரீனிவாசன் என்ற நபர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறு சிற்றுண்டி 'ஸ்வீட் கார்ன்' விற்பனையாளர், சோளத்துடன் மசாலாப் பொருள்களைச் சேர்த்து, இனிமையான இசை மூலம் தயாரித்து வழங்குகிறார். இந்த வீடியோ சுமார் 30 விநாடிகள் நீளமானது, அந்த வீடியோவுடன் சேர்த்து கார்த்திக் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளதாவது, "நீங்கள் ஒரு இமாலய வேலை செய்ய முடியும். ஆனால் உலகத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை நீங்கள் நம்புவதற்கு உற்சாகம் உண்டாக்கலாம். உங்கள் பார்வையாளர்களை நினைவில் வைத்துக் கொள்ளவும், பேசவும் விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்த வீடியோவை சுமார் லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் ரீ-ட்விட் செய்துள்ளனர். இவரை பாராட்டி பாடகி சின்மயி உட்பட பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.