`Sir` என்று கூறவேண்டாம்.... வைரலாகும் ராகுல் காந்தியின் இந்த வீடியோ!
சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்றே அழையுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வெகு வைரலாகி வருகிறது.
சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்றே அழையுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வெகு வைரலாகி வருகிறது.
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கட்சி இணைந்து சந்திக்கிறது. இக்கூட் டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
முன்னதாக மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை சுடசுட துவங்கியுள்ளனர். அந்த வகையில் .சென்னையின் புகழ் மிக்க பெண்கள் கல்லூரியான ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாடினார்.
தன்னிடம் எளிமையான கேள்விகளை கேட்க வேண்டாம்,கடினமான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என கூறி,தனது உரையை ராகுல் காந்தி ஆரம்பித்தார்.அப்போது கேள்வி கேட்க ஆரம்பித்த மாணவி ஒருவர் 'Hi Sir' என கூறிக்கொண்டு தனது கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.அப்போது குறுக்கிட்ட ராகுல், ‘என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க' என்றார். உடனே அந்த மாணவியும், ‘Hi Rahul' என்றார்.இதை கேட்ட மொத்த மாணவியர் கூட்டமும் கரகோஷம் எழுப்ப அரங்கமே அதிர்ந்தது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெகு வைரலாகி வருகிறது.