செல்ல பிராணிகளில் நாய்க்கு அடுத்ததாக பூனை மிகவும் விரும்பி வளர்க்கப்படும் செல்லப்பிராணி என்றால் மிகையில்லை. பூனைகளின் சேட்டைகளும் மிகவும் ரசிக்கக் கூடியவை. அந்த வகையில், உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Abyss Nature என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட வைரல் வீடியோவில் , பூனை ஒன்று கூலாக ஹவாய் செருப்பு அணிந்து கொண்டு கோப்பையில் எதையோ அருந்திக் கொண்டு இருக்கிறது. அந்த பூனை நாற்காலி ஒன்றன் மீது ஏறி நிற்பதையும் காணலாம். 


நாற்காலியின் மீது ஏறி நின்று கொண்டு, ஸ்டைலாக கோப்பையை தனது முன்னங்காலால் பிடித்துக் கொண்டு நிற்கிறது. அது காலில் அணிந்திருக்கும் மஞ்சள், பச்சை நிற செப்பல் தான் முக்கிய ஹைலைட். மேலும் அந்த கோப்பையுனுள் தனது முன்னங்கைகள் வைத்து துழாவி மீதம் இருப்பதையும் சாப்பிட முயலுகிறது. 


பொதுவாக பூனை அப்பாவி தோற்றம் கொண்டது. ஆனால், இங்கே இந்த பூனையை பார்க்கும் போது அப்படித் தோன்றவில்லை. மிகவும் சேடை செய்யும் பூனையாகவே தோன்றுகிறது. 


மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்


வைரல் வீடியோவை கீழே காணலாம்:



இந்த வீடியோ பகிரப்பட்டு ஒரு நாளே ஆகியுள்ள நிலையில், 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இது வரை 7.3 மில்லியன் அதாவது சுமார் 73 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்து ஏராளமானோர் கருத்தும் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Viral News: வயிற்றில் இருந்த ஆணி, பேட்டரி, நாணயங்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G