வைரல் வீடியோ: டிரான்ஸ்பரன்ட் உடையில் பிரபலம்..அசந்து போன நெட்டிசன்கள்!

Video Urfi Javed In Transparent Dress :இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வருபவர், உர்ஃபி ஜாவீத். இவரது சமீபத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இவர் டிரான்ஸ்பரண்ட் உடையில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 6, 2025, 07:11 PM IST
  • டிரான்ஸ்பரண்ட் உடையில் வந்த பிரபலம்
  • ரசிகர்கள் அடித்த கமெண்ட்..
  • வைரலாகும் வீடியோ..
வைரல் வீடியோ: டிரான்ஸ்பரன்ட் உடையில் பிரபலம்..அசந்து போன நெட்டிசன்கள்!

Video Urfi Javed In Transparent Dress : இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான உடைகளை அணிந்து, அதனை வீடியோ மற்றும் போட்டோக்களாக எடுத்து பிரபலமானவர் உர்ஃபி ஜாவீத். இவர், எங்கு சென்றாலும் இவரை ஃபாலோ செய்வதற்கு என்று மட்டும் ஒரு கூட்டம் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும். அப்படி அவர்கள் எடுத்த ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

உர்ஃபி ஜாவீத்:

இந்தியாவை சேர்ந்த இண்டர்னெட் பிரபலமாக இருக்கிறார், உர்ஃபி ஜாவித். தனித்துவமான ஃபேசன் திறனுக்கு பெயர் பெற்ற இவர், சில திரை பிரபலங்களுக்கும் தோழியாக இருக்கிரார். இவர், பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியான லவ் செக்ஸ் அவுர் தோக்காஹ் 2 படத்தில் நடித்திருந்தார். 

கட்டுப்பாடுள்ள குடும்பத்தில் வளக்கப்பட்ட உர்ஃபி, அந்த குடும்பத்தில் இருந்து பிரிந்த பின், தனக்கான பயணத்தை தொடர்ந்தார்.   மும்பையில் வசித்து வரும் இவர், பல சமயங்களில் வித்தியாசமாக உடையணிந்து வைரலாவதுண்டு. சொல்லப்போனால், இதைவைத்துதான் அவருக்கு பெரிய பெரிய வாய்ப்புகளும் பின்னாளில் கிடைத்தது. தமிழ் நடிகை சமந்தாவும் இவரும் தோழிகளாக இருக்கின்றனர்.

வித்தியாசமான ஆடைகள்:

உர்ஃபி, கோணிப்பையில் 2 பீஸ் உடை, பூக்களால் ஆன பிக்கினி, இலைகளால் ஆன ஆடை, போட்டோக்களால் ஆன உடை, பிளாஸ்டிக் பைகளை வைத்து செய்யப்பட்ட ஆடைகள் என பல ஆடைகளை உடுத்தி, அதன் மூலம் வைரலாகி ஃபேஷன் ஐகானாக இருக்கிறார்.

இவர், டிரான்ஸ்பரண்ட் உடை அணிவது இது முதல்முறையல்ல. ஆனால், ஒவ்வொரு முறை இவர் இப்படி ஆடை அணியும் போதும் அதற்காக இணையவாசிகளிடம் பலவாரான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

வைரல் வீடியோ..

மும்பையை பொறுத்தவரை, செலிப்ரிட்டிகளை பின்தொடர்வதற்கும், அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் என்பதை நோட்டம் விடுவதற்கும் Paparazzi போட்டோ கலைஞர்கள் இருப்பதுண்டு. அவர்கள், உர்ஃபியையும் விட்டு வைப்பதில்லை. அவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே சென்று அவரை விதவிதமாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை பொது தளங்களில் பதிவிடுவர். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றில்தான் தற்போது உர்ஃபி இருக்கிறார்.

இதில், பச்சை நிற ஆடை அணிந்திருக்கும் அவர், அதனை ட்ரான்ஸ்பரண்ட் ஆக வைத்திருக்கிறர். கூடவே அதே கலரில் மாஸ்கையும் போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இதற்கு அந்த ஆடையை போடாமலேயே இருந்திருக்கலாமே என்று கூறி வருகின்றனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | App, MBA... அத்தனைக்கும் ஆப்பு வைத்த ஆட்டோகாரர்: ஒரே ஐடியாவில் ஓஹோன்னு வாழ்க்கை, வைரல் ஆகும் போஸ்ட்

மேலும் படிக்க | விருது விழாவிற்கு Transparent ஆடை அணிந்து வந்த பிரபலம்! வைரலாகும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News