)
Viral Video: அட, அப்படியா? என பலரை வியக்க வைத்த ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. தெரு நாய்களின் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு பெண் 180 மீட்டர் தூரத்திற்கு OLA பைக் சவாரியை புக் செய்தார். பைக் ஓட்டுநர், அதன் வீடியோவை சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்த பின்னர், அந்த டெல்லி பெண்ணின் இந்த நம்ப முடியாத செயல் வைரல் ஆகி வருகின்றது.
வைரலான வீடியோவில், தனக்கு புக் ஆகியிருக்கும் மிக குறுகிய தூரத்தை (சுமார் 2 நிமிட நடை) பார்த்தபோது பைக் ஓட்டுநர் குழப்பமடைந்து, முகவரி சரியாக இருக்கிறதா என்று அந்தப் பெண்ணிடம் கேட்கிறார். அவர் அதை உறுதிப்படுத்தி, அந்தப் பகுதியில் உள்ள தெருநாய்களைப் பார்த்தால் தனக்கு பயம் என்றும், தனியாக நடக்க விரும்பாததால் பைக் புக் செய்ததாகவும் விளக்குகிறார். அந்த சவாரியில் அவருக்கு ரூ.19 செலவானது.
இந்த குறுகிய கிளிப் டெல்லி போன்ற நகர்ப்புறங்களில் தெரு பாதுகாப்பு மற்றும் விலங்கு கட்டுப்பாடு குறித்த விவாதங்களைத் தூண்டியது. அதிகரித்து வரும் தெருநாய்கள் எண்ணிக்கை குறித்து டெல்லிவாசிகளிடையே அதிகரித்து வரும் அச்சத்திற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகவும் உள்ளது.
Delhi Woman Books Bike for 180m to avoid stray dogs
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 7, 2025
pic.twitter.com/silhSqvUKV
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இது வேடிக்கையாக இருந்தாலும், சிந்திக்க வேண்டிய விஷயமாகவும் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறி நாய்களிடம் மாட்டிக்கொண்டு பலியான சம்பவங்களை நாம் சமீபத்தில் அதிகமாகவே பார்த்து வருகிறோம். இந்த வைரல் வீடியோவிற்கு பல இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
"தெரு நாய்கள் முழு வட இந்தியாவிலும் ஒரு பெரிய பிரச்சனை" என்று ஒருவர் எழுதியுள்ளார். மற்றொருவர், "டெல்லி நகராட்சி என்ன செய்கிறது? இது ஒரு நகைச்சுவை அல்ல. தெருநாய்கள் ஆபத்தானவை." என ஏச்சரித்துள்ளார்.
ஆன்லைனில் பலர் அந்த பெண்ணுடைய பயத்தைப் புரிந்துகொள்ள முடிந்ததாகக் கூறினர். எனினும் சிலர் இதை ஒரு வேடிக்கையான விஷயமாக பார்த்தனர்.
“அடுத்த முறை வீட்டின் வேறொரு அறையில் ஒரு பல்லி இருந்தால், அங்கு செல்லக்கூட பைக் புக் செய்வார்களோ" என ஒரு பயனர் கிண்டல் செய்தள்ளார்.
பல சமூக ஊடக பயனர்கள், பைக் ஓட்டுநர் அந்தப் பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிடும் வரை வழியில் எந்த தெரு நாயையும் பார்க்க முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர். ஒரு பயனர், “யாருக்காவது இந்த வீடியோவில் ஒரு நாயாவது கண்ணில் பட்டதா?" என்று கேள்வி கேட்டுள்ளார். “தெரு நாய்களுக்காக புக் செய்யப்பட்ட இந்த ரைடில் ஒரு நாயையும் பார்க்க முடியவில்லை!” என்று மற்றொருவர் எழுதியுள்ளார். "நாய்களை விடுங்கள், அந்தப் பகுதியில் வேறு மனிதர்களை கூட காணமுடியவில்லை" என்று மற்றொருவர் அதற்கு பதில் அளித்துள்ளார்.
“இவை யூடியூப்பில் உள்ள உள்ளடக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோக்கள், ஏனெனில் பொதுவாக பைக் ஓட்டுநர்கள் தங்கள் ஹெல்மெட்டில் கேமராவைப் பயன்படுத்துவதில்லை.” என்று ஒரு அறிவாளி பயனர் கண்டுபிடித்து எழுதியுள்ளார்.
ஆனால், சில பயனர்கள் இதே போன்ற சம்பவங்களை நினைவுகூர்ந்தனர். “நான் அதே காரணத்திற்காக ஒரு முறை ஊபர் புக் செய்தேன். நான் ஒரு இரவு நேர நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன், அங்கு நாய்களின் படை இருந்தது,” என்று ஒரு பயனர் தன் அனுபவத்தை பகிர்ந்துள்லார்.
அடுத்த முறை தெருவில் தனியாக நடக்கும்போது தெரு நாய்கள் இருந்தால், கவலை வேண்டாம், பைக் புக் செய்யலாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ