வீடியோ: அன்பை பரிமாறிக் கொண்ட ராகுல்-பிரியங்கா!!

கான்பூர் விமான நிலையத்தில் ராகுல்-பிரியங்கா சந்தித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்ட விடியோவை ராகுல் காந்தி தனது இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

Updated: Apr 28, 2019, 12:17 PM IST
வீடியோ: அன்பை பரிமாறிக் கொண்ட ராகுல்-பிரியங்கா!!

கான்பூர் விமான நிலையத்தில் ராகுல்-பிரியங்கா சந்தித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்ட விடியோவை ராகுல் காந்தி தனது இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி கான்பூர் சென்றனர். அப்போது கான்பூர் விமான நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்போது கேமராவுக்கு அருகில் வந்து பேசிய ராகுல் காந்தி, ‘ஒரு நல்ல சகோதரன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை உங்களுக்கு சொல்கிறேன். மிக மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் எனக்கு சிறிய ஹெலிகாப்டர்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் மிகவும் குறுகிய பயணத்தை மேற்கொள்ளும் பிரியங்காவோ பெரிய ஹெலிகாப்டர் பெற்றிருக்கிறார்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

உடனே பிரியங்கா, ‘அது உண்மை இல்லை’ என சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர் ராகுல் காந்தி, ‘ஆனால், நான் அவரை அன்பு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டார். இருவரின் சகோதர பாசத்தை பார்த்த விமான நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் நெகிழ்ந்தனர்.

தற்போது இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.