பைக் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து..கட்டிப்பிடித்து சென்ற பெண்! வைரலாகும் வீடியோ..

Watch Video Noida Couple Hugging While Riding Bike : சில நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் பைக்கில் அமர்ந்து தனது காதலனை கட்டிப்பிடித்தவாறு சென்றிருந்தார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த ஜோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 17, 2025, 03:58 PM IST
  • பைக்கில் கட்டிப்பிடித்து சென்ற ஜோடி
  • வைரலான வீடியோ
  • ட்விஸ்ட் வைத்த போலீஸ்
பைக் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து..கட்டிப்பிடித்து சென்ற பெண்! வைரலாகும் வீடியோ..

Watch Video Noida Couple Hugging While Riding Bike : இளம் கன்று பயம் அறியாது என்பது போல, இளைஞர்கள் பலர் துணிச்சலுடன் சில செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற செயல்கள், பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் இவையே அவர்களை ஆபத்தில் தள்ளி விடுவதாய் இருந்தால் என்ன செய்வது? அப்படித்தான் சமீபத்தில் ஒரு இளம் ஜோடி, ஆபத்தான செயல் ஒன்றில் ஈடுபட்டனர். 

Add Zee News as a Preferred Source

பைக்கில் கட்டிப்பிடித்தவாறு பயணம்..

நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்பிரஸ்வே சாலையில் இளம் ஜோடி, பைக்கில் சென்றிருக்கின்றனர். இவர்கள் சாதாரணமாக எல்லாம் அந்த பைக்கில் பயணிக்கவில்லை. பைக்கை ஒருவர் ஓட்ட, அந்த பெண் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டிருந்தார். அதோடு மட்டுமில்லாமல், பைக் ஓட்டிக்கொண்டிருந்த இளைஞரை கட்டிப்பிடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். ஜோடியின் இந்த வீடியோவை, ரோட்டில் அந்த பைக்கிற்கு அருகில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்து ஒருவர் எடுத்துள்ளார். 
அதில், பயணம் செய்யும் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. கூடவே, அதி வேகமாக வேறு பயணித்திருக்கின்றனர்.

இந்த 19 வினாடி வீடியோவானது, ஜூன் 15ஆம் தேதி அன்று இணையத்தில் வைரலானது. இதனை பார்த்த இணையவாசிகள் கொதித்து எழுந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு சட்ட ரீதியான சவுக்கடியும் கிடைத்துள்ளது.

ரூ.55,000 அபராதம்:

காதல் ஜோடிகள் இருவரும் கட்டிப்பிடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானதை ஒட்டி, போலீஸார் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை காவல் ஆய்வாலர் லகான் சிங் யாதவ் என்பவர், சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அந்த காதல் ஜோடி இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதே போல, சாலை விதிமுறைகளை மதிக்காத காரணத்திற்காக இது இவர்கள் இருவருக்கும் தகுந்த தண்டனையாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் பிறகாவது இருவரும் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் மீண்டும் இது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், அங்கீகரிக்கப்படாத பந்தயம் அல்லது அதிக வேகத்தில் வண்டி ஓட்டியது, உரிமம் அல்லது தேவையான அனுமதி இல்லாமல் வாகனம் ஓட்டுதல், சட்டப்பூர்வ வழிகாட்டுதலை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் இவர்களூக்கு இந்த அபராதத்தொகை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் பகிர்த யாதவ், இது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் பொது மக்கள் ஈடுபட கூடாது என்றும், அப்படி ஈடுபட்டால் இதை விட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இது போல இளைஞர்கள் சிலர் சாகசத்தில் ஈடுபடுவது குறித்து பொது மக்களும் கவலை தெரிவித்து வருகின்றன. இப்படிப்பட்டவர்களை பார்த்து சிலர் எளிதில் கற்றுக்கொள்வர் என்றும், இது அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர், ஒழுங்காக பயணம் செய்திருந்தால், அந்த அப்ராத தொகையை வைத்துக்கொண்டு தாய்லாந்து வரை போய் வந்திருக்கலாமே என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | விமான விபத்துக்கு முன் ரீல்ஸ் செய்த விமான பணிப்பெண்கள்! வைரலாகும் கடைசி வீடியோ.

மேலும் படிக்க | முத்தமிடும் பெண்! சுறாவுடன் ஆபத்தான வீடியோ வைரல்.. உண்மையா? நெட்டிசன்கள் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News