‘நான் இருக்கேன்...’ மணமகளுக்கு அவசர சிகிச்சை பிரிவிலேயே தாலி கட்டிய மணமகன்: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

Viral Video: மருத்துவமனையில் மணமகள் நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்திருக்க, மணமகன் அவருக்கு தாலி கட்டி, குங்குமம் இடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 22, 2025, 07:56 PM IST
  • மேக் அப் செய்ய சென்ற மணமகள்.
  • விபத்தில் சிக்கிய பரிதாபம்.
  • ‘நான் கூடவே இருக்கேன்...’ கண் கலங்க வைத்த மணமகன்.
‘நான் இருக்கேன்...’ மணமகளுக்கு அவசர சிகிச்சை பிரிவிலேயே தாலி கட்டிய மணமகன்: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

கோட்டயம்: கேரளா மாநிலம் கோட்டயத்தில் விபத்தில் சிக்கிய மணமகளுக்கு, மணமகன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிலேயே தாலி கட்டினார். தான் கூடவே இருப்பதாகவும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறிய வீடியோ வைரல் ஆகி வருகின்றது. நடந்தது என்ன? இங்கே காணலாம்.

Add Zee News as a Preferred Source

மேக் அப் செய்ய சென்ற மணமகள்

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷேரோண்-ஆவணி. இவர்களுடைய திருமணம் நடத்த நிச்சயக்கபட்டிருந்த நிலையில்  மணப்பெண் ஆவணி முக அலங்காரம் செய்வதற்காக காரில்  வெளியே சென்றுள்ளார். 

விபத்தில் சிக்கிய பரிதாபம்

அப்போது கோட்டயம் -குமரகம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஆவணி தீவிர படுகாயமடைந்ததுடன் கோட்டயம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிக்சைபிரிவில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கொச்சியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஆவணிக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

குறித்த முகூர்த்தத்தில் திருமணம்

இந்நிலையில்  மணமகன் ஷேரோண் குடும்பத்தினரிடம் பேசியதுடன் நிச்சயித்த முகூர்த்தத்திலேயே திருமண நடத்த திட்டமிட்டார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி சிறப்பு அனுமதி வாங்கி மருத்துவமனையின் அவசர சிகிக்சை பிரிவிலேயே மணமகளான ஆவணிக்கு குடும்பத்தினர் முன்னிலையில் தாலி கட்டி கரம்பிடித்தார் 

‘நான் கூடவே இருக்கேன்...’ கண் கலங்க வைத்த மணமகன்

மேலும் தான் கூடவே இருப்பதாகவும், எதற்கும் கவலை வேண்டாம் எனவும் மணமகளுக்கு ஆறுதல் கூறிய காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது .

வைரல் ஆகும் வீடியோ

விபத்தால்கூட தங்களை பிரிக்க முடியாது என கருதிய மணமகனின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. மணமகளுக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் அவர் கொடுத்த ஆறுதலும், உடன் இருந்து வெளிப்படுத்திய பக்குவமும் அனைவராலும் பாராட்டப்படுகின்றது. மருத்துவமனையில் மணமகள் நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்திருக்க, மணமகன் அவருக்கு தாலி கட்டி, குங்குமம் இடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | சிக்கன் ஃப்ரைக்காக சண்டையிட்ட இரு வீட்டார்.. 15 பேருக்கு காயம்.. காவல்துறை செய்த சம்பவம்

மேலும் படிக்க | கன்றுகுட்டிக்கு தாயாக மாறிய நாய் : மனிதநேயத்தை மிஞ்சிய மிருகநேயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News