What Happens After Die: அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள மக்களை சிந்திக்க வைத்துள்ளது. இறந்து விட்டார் எனக் கூறப்பட்ட பெண், சுமார் 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்றுள்ளார். அந்த 8 நிமிடங்களில் என்ன நடந்தது? அவர் எப்படி மீண்டும் உயிர்த்தெழுந்தார்? போன்ற விவரங்களை பார்ப்போம்.
கொலராடோவில் வசிக்கும் பிரியானா லாஃபர்டி, ஒரு ஆபத்தான நரம்பியல் நோயான மயோக்ளோனஸ் டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட சுமார் 8 நிமிடங்கள் அவர் மூச்சு பேச்சு இல்லாம இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பிரியானா லாஃபர்டி தான் அனுபவித்தது பற்றி கூறியுள்ளார். அது மிகவும் மர்மமானது மற்றும் அமைதி நிறைந்ததாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
பிரியானா லாஃபர்டி கூறுகையில், தனது உடல் செயல்படத் தொடங்கியது, திடீரென்று தனது ஆன்மா தனது உடலுக்கு மேலே உயர்ந்து செல்வது போல் உணர்ந்ததாக கூறினார். "நீங்கள் தயாரா?" என்று கேட்கும் ஒரு குரல் கேட்டதாகவும், பின்னர் எல்லாம் இருளில் மூழ்கியதாகவும் அவர் கூறினார். மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினாலும், என்னுடைய உணர்வு உயிருடன் இருந்தது என்று அவர் கூறுகிறார்.
"மரணம் ஒரு மாயை, ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது உணர்வு எப்போதும் உயிருடன் இருக்கும், நமது உண்மையான அடையாளம் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறுகிறது" என்று அவர் நம்புகிறார். அந்த வேறொரு உலகத்தை அடைந்தவுடன், சிந்தனையின் சக்தி அங்குள்ள அனைத்தையும் மாற்றும் என்பதை உணர்ந்ததாக அவர் மேலும் கூறினார். "அங்கே காலம் என்று எதுவும் இல்லை, ஆனால் எல்லாம் ஒரு வரிசையில் இருந்தது" என்று அவர் கூறினார்.
அங்கு சென்ற பிறகு, தனது மனித வடிவத்தைக் காணவில்லை அல்லது எந்த வலியையும் உணரவில்லை என்று ப்ரியானா கூறினார். மாறாக, அவர் ஆழ்ந்த அமைதியையும் தெளிவையும் அனுபவித்தார். "நான் முற்றிலும் அமைதியாக இருந்தேன், ஆனால் உள்ளே இருந்து முழுமையாக உயிருடன் இருப்பதாக உணர்ந்தேன்" என்று அவர் கூறினார். அவரது கூற்றுப்படி, "அங்கே ஒரு தெய்வீக சக்தி இருந்தது, அது அனைவரையும் நிபந்தனையற்ற அன்புடன் கவனித்துக்கொள்கிறது" என அவர் கூறினார்.
மேலும் படிக்க - மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு: வைரல் ஆகும் திருமண வீடியோவில் மறைந்திருக்கும் தடயம்
மேலும் படிக்க - இன்ஸ்டாகிராமில் காதல்..நேரில் சந்தித்த போது வந்த ட்விஸ்ட்! என்னாச்சு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









