Hotwifing என்றால் என்ன? மனைவியை பிறருக்கு தாரை வார்க்கும் கணவன்! புது செக்ஸ் ட்ரெண்ட்..

What Is Hotwifing A New Mating Trend : இன்றைய உலகில், உறவுகளை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி புதிதாக ட்ரெண்டில் இருக்கும் ஒரு பெயர் Hotwifing.  

Written by - Yuvashree | Last Updated : Jun 17, 2025, 07:17 PM IST
  • ஹாட்வைஃபிங் என்றால் என்ன?
  • மனைவியை தாரை வார்க்கும் முறை
  • இதன் அர்த்தம் இதோ..
Hotwifing என்றால் என்ன? மனைவியை பிறருக்கு தாரை வார்க்கும் கணவன்! புது செக்ஸ் ட்ரெண்ட்..

What Is Hotwifing A New Mating Trend : உலகம் மாற மாற, அதற்கு ஏற்றவாறு சூழல்களும், காட்சிகளும் மாறிக்கொண்டே வருகிறது. இது, அனைத்து விதமான உறவுகளுக்கும் கூட பொருந்தும். இப்படி, உறவுகளை பாதுகாத்துக்கொள்ள, புதிது புதிதான ட்ரெண்டையும் சிலர் உருவாக்கி வருகின்றனர். அப்படி, மக்கள் மத்தியில் இப்போது புதிதாக செக்ஸ் ட்ரெண்டாக இருக்கிறது, Hotwifing.

Hotwifing என்றால் என்ன?

உறவுகளும், அதன் அர்த்தங்களும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. முன்னர் எல்லாம், காதலை சொல்லிவிட்டாலே அவர்கள் காதலன்-காதலிதான். இப்போது அப்படியில்லை, அதற்கு Situationship, Benching, Ghosting என்று பல பெயர்களை வைத்துள்ளனர். அப்படி தற்போது பரவலாக பரவி வரும் ப்ரு பெயர், Hotwifing. இது, மக்களால் பரவலாக பின்தொடரப்படும் செக்ஸ் ட்ரெண்ட் ஆகும். 

இந்த செக்ஸ் ட்ரெண்டை பொருத்தவரை, ஏற்கனவே உறவில் இருக்கும் ஒருவர், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவருடன் உடல் ரீதியான உறவை வைத்துக்கொள்வதை குறிக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் Non-Monogamy மற்றும் Polygamy என்று சில கூறுவர். இந்த ட்ரெண்ட், ஒரு திருமணமான பெண், கணவரின் முழு சம்மதத்துடன் பிற ஆண்களுடன் பாலியல் ரீதியான விஷயங்களில் ஈடுபடுகிறார். அவரது கணவர், தனது மனைவியை இதற்காக ஊக்கப்படுத்தோடு மட்டுமன்றி, அதனை லைவாக காணவும் செய்கிறார். இதுதான் Hotwifing ட்ரெண்ட் ஆகும்.

இது பலருக்கு ஒத்துப்பட்டு வராதது போல தோன்றினாலும், ஒரு சிலருக்கு இது ஏதுவானதாக இருக்கிறதாம். இது தைரியமான நெருக்கம், பாலியல் சுயாட்சி மற்றும் திறந்த தொடர்பு ஆகியவற்றைக் கொண்ட வளர்ந்து வரும் நிகழ்வாகும். இதில் ஈடுபடும் பலர், உடலுறவு வேறு மற்றும் காதல் வேறு என்று நினைக்கின்றனர். ஒரு தம்பதி ஒருவர் மீது ஒருவர் பயங்கர காதலை கொண்டிருந்தாலும், உடல் ரீதியாக திருப்தி பட்டுக்கொள்ளாதவர்களாக இருப்பர். இதனால், பல ஆண்கள் தங்களது மனைவிகளை இந்த ட்ரெண்டில் ஈடுபட ஊக்கப்படுத்துகின்றனர். 

அர்த்தம்:

Hotwifing என்பது உறவில் இருக்கும் இருவரும் சம்மதம் தெரிவித்த பிறகு நடைபெறும் ஒரு விஷயமாகும். இதில், ஒரு பெண்ணின் கணவரோ அல்லது அந்த பெண்ணின் பார்ட்னரோ, பிற ஆண்களுடன் அந்த பெண் பாலியல் உறவில் இருப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்து அனுபவிக்கிறார். இந்த உறவு, அந்த பெண்களுக்கு பாதுகாப்பாகவும் சரியானதாகவும் இருக்கும் வரை தம்பதிகள் இதில் ஈடுபடுகின்றனர். இதை சரியாக மெயிண்டெயின் செய்ய, தெளிவான தொடர்பு, பாதுகாப்பு உணர்வு, சரியான எல்லை கோடுகள் உள்ளிட்டவை முக்கியமாகும். 

ஏன் இதை செய்கிறார்கள்?

Hotwifing பற்றி பேசும், செக்ஸ் மருத்துவர்கள், இந்த ட்ரெண்டை ஏன் சிலர் ஃபாலோ செய்கின்றனர் என்பது குறித்து பேசுகின்றனர். அதில், இந்தக் காரணங்களில் அடங்கும் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

இன்பம்-தங்களின் துணையின் இன்பத்திலிருந்து இன்பத்தைப் பெறுதல் விதிமுறைகளை உடைத்தல்-ஒருதார மணத்தைச் சுற்றியுள்ள சமூக விதிமுறைகளை மீறுதல்
நெருக்கத்தை அதிகரித்தல்-தங்கள் துணை மற்றும் தங்கள் துணையின் காதலரின் புதிய கோணத்தை ஆராய்தல்
அதிகாரம்-தங்கள் துணையை மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்தும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை ஆகும். 

மேலும் படிக்க | MAYDAY என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்? முழு அர்த்தம்..

மேலும் படிக்க | No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News