கன்னடத்துல மாத்தாடி மாத்தாடினு சொல்லி மாட்டிக்கிட்ட பெங்களூரு: இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்

Viral Story: "தயவுசெய்து கன்னடத்தில் தொடர்பு கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையின் படத்தை பகிர்ந்த ஒரு சமூக ஊடகப் பயனர், அதுதான் பல நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறக் காரணம் என்று கூறியுள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2025, 01:51 PM IST
  • தயவுசெய்து கன்னடத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
  • பயனர் பகிர்ந்த படம்.
  • வைரல் ஆகும் போஸ்ட்.
கன்னடத்துல மாத்தாடி மாத்தாடினு சொல்லி மாட்டிக்கிட்ட பெங்களூரு: இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்

Viral Story: பெங்களூருவில் நடந்து வரும் கன்னட மொழி சர்ச்சை மற்றும் உள்ளூர்வாசிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான பிளவு குறித்த சமூக ஊடகப் பதிவு திங்களன்று புதிய விவாதத்தைத் தூண்டியது. பல மாதங்களாக இந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இது மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

"தயவுசெய்து கன்னடத்தில் தொடர்பு கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையின் படத்தை பகிர்ந்த ஒரு சமூக ஊடகப் பயனர், அதுதான் பல நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறக் காரணம் என்று கூறியுள்ளார்.

"எதிர்காலத்தில் என் குழந்தைகள், "ஐடி மற்றும் மின்னணு பன்னாட்டு நிறுவனங்கள் ஏன் பெங்களூருவை விட்டு வெளியேறின?" என்று என்னிடம் கேட்டால், நான் அவர்களுக்கு இதைக் காண்பிப்பேன்," என்று அந்த சமூக ஊடகப் பயனர் X இல் பதிவிட்டார் "தயவுசெய்து கன்னடத்தில் தொடர்பு கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையின் படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில் 23,000 க்கும் மேற்பட்ட வியூஸ்களையும் 600 க்கும் மேற்பட்ட லைக்குகளையயும் பெற்றுள்ளது. இதற்கு கமெண்ட் செய்துள்ள பெரும்பாலான பயனர்கள், பதிவிட்டவரின் உணர்வோடு உடன்பட்டனர்.

“நிறுவனங்கள் பெங்களூரை விட்டு ஹைதராபாத்திற்கு இடம்பெயர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை" என்று ஒரு பயனர் பதிலளித்துள்ளார்.

“இதற்கு முதல் காரணம் பைத்தியக்காரத்தனமான போக்குவரத்து மற்றும் வாழ்க்கைச் செலவாக இருக்கும். இது இரண்டாவது காரணமாக இருக்கும்,” என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.

“நான் ஹாங்காங்கில் வசிக்கிறேன், இங்கு நான் என் தேவைகளுக்காக அணுகும் அனைவரும் என்னுடன் ஆங்கிலத்தில் பேசி எனக்கு வேண்டிய தகவல்களை அளிக்கிறார்கள், பொருட்களை விற்கிறார்கள், சேவைகளை வழங்குகிறார்கள். சீன மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. நான் துபாய்க்குச் செல்லும்போது, ​​சிங்கப்பூரில் அரபு அல்லது பஹாசா மொழியைக் கற்றுக்கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்..,” என்று உலகளவில் உள்ள பரந்த மனப்போக்கை விளக்கியுள்ளார். 

“அவர்கள் தங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமும் கன்னடத்திலும் பேசுவார்களா,” என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுபுறம், பலர் உள்ளூர்வாசிகளுக்கு ஆதரவளித்தும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், “இந்த விஷயத்தில் கன்னடர்களுக்கு முழு ஆதரவு... இப்படியே தொடருங்கள், நாங்கள் மராத்தியர்கள் உங்களுடன் இருக்கிறோம்...” என்று கமெண்ட் செய்துள்ளார்.

“மொழிக்காக யாரும் வெளியேறுவதில்லை. உலகளாவிய ஜாம்பவான்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் புதிய அலுவலகங்களை இங்கு திறக்கிறார்கள். சிலர் வெளியேறினாலும், அது குடிமை நிர்வாகக் குறைபாடு மற்றும் வாழ்க்கைச் செலவு காரணமாக மட்டுமே இருக்கும்” என்று மற்றொருவர் கூறினார்.

‘பெங்களூரு வெறுப்புக்கு உரியது…’: பெண்ணின் வைரல் பதிவு

பெங்களூருவில் வசிக்கும் மற்றொரு பெண் ஒருவரின் இதே போன்ற பதிவும் வைரல் ஆகியது. மொழி சர்ச்சைக்கு மத்தியில் வர்க்க பதட்டங்கள், உள்ளூர்வாசிகளின் அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் மாறிவரும் சமூக இயக்கவியல் பற்றிய உரையாடல்களை இது தூண்டியுள்ளது. “நான் ஒரு கன்னடிகர், பெங்களூரு நகரை பாதுகாத்து நான் களைத்து விட்டேன். தற்போது கிடைக்கும் வெறுப்பு இந்த நகரத்துக்கு தேவைதான்" என்று அந்தப் பெண் Reddit -இல் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 22 ஆண்டுகளாக மேக்-அப் கலைக்காமல் இருக்கும் பெண்! இதனால் என்ன ஆச்சு பாருங்க..

மேலும் படிக்க | டெபாசிட்டில் 40% தான் திருப்பி கொடுத்தார்.... ஹவுஸ் ஓனர் அட்ராசிட்டி: வைரல் ஆகும் போஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News