)
Great White Shark Dangerous Viral Video: கடலில் வாழும் கொடிய வேட்டையாடும் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிப் பேசும்போது, முதலில் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று பெரிய வெள்ளை சுறா (The Great White Shark). வெள்ளை சுறா தோராயமாக 4 அடி நீளத்தில் இருந்து சுமார் 20 அடி நீளம் வரை வளரக்கூடியது. 4,000 பவுண்டுகளுக்கு மேல் எடை கொண்டது. ஆனால் வெள்ளை சுறா மனிதர்களை உண்ணுவதில்லை என்ற கருத்தும் இருக்கிறது. பெரிய வெள்ளை சுறாக்கள் மனிதர்களிடம் விரோதமாக செயல்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் மனிதர்கள் அவர்களுக்கு 'சிறந்த உணவு' அல்ல. நாம் அவர்களின் 'சிறந்த உணவு மெனுவில்' ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பெரிய வெள்ளை சுறாக்களுடன் விளையாடுவது என்பது யாரும் எளிதில் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் இந்த 'கடல் உயிரியலாளர்' ஆச்சரியமான ஒன்றை முயற்சி செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி குறித்து பார்ப்போம்.
சமீபத்தில் ஒரு வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டது. அதில் ஒரு பெண் ஒரு பெரிய வெள்ளை சுறாவை சுற்றி விளையாடுவதையும் முத்தமிடுவதையும் பார்க்க முடிந்தது. வீடியோ பதிவில், அந்தப் பெண் '2018 முதல் இதுபோன்ற சோதனை செய்து வருகிறார்' என்று கூறப்பட்டு உள்ளது. கடல்வாழ் உயிரினங்களுடன் அன்பாக பழக வேண்டும், ஒருவருக்கொருவர் பிணைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் டஹிடி கடற்கரையில் ஒரு நம்பிக்கை சோதனையில் அந்த பெண் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதாவது அந்தப் பெண் இந்த நுட்பத்தை ‘முன்கணிப்பு பரஸ்பர கண்டிஷனிங் (PRC)’ என்று அழைக்கிறார். மேலும் அந்த ‘இளம் பெரிய வெள்ளை சுறாவுடன் பல வாரங்கள் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் சுறாவுக்கு ‘டான்டே’ என்று பெயரிட்டதாகவும், வெறும் 30 மாதங்களில் சுறாவுடன் ஒரு அசாதாரண பிணைப்பை உருவாக்க முடிந்தது என்றும் பதிவின் தலைப்பில் கூறியுள்ளார்.
ஆனால் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை பார்க்க
இந்த ஜோடி ஒன்றாக ‘சில்லிட்’ செய்யும் வீடியோ வைரலானவுடன், நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சிலர் அதிர்ச்சியடைந்தனர், மீதமுள்ளவர்கள் இந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டது என்று கூறி வருகின்றனர்.
இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் ‘ziad_zebra’ என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டு உள்ளது. இந்தப் பதிவு 2 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ