What Behind The Man-Mum: சீனாவில் 'ஆண் அம்மாக்கள்' என்று அழைக்கப்படும் ஆண்களின் ஐந்து நிமிட அரவணைப்புக்கு இளம் பெண்கள் ₹600 (50 யுவான்) வரை செலுத்துவது போன்ற ஒரு புதிய போக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது என்று பலர் கூறுகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நீங்கள் அலுவலகத்திலிருந்து சோர்வாக வீடு திரும்புகிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தனிமை உணர்கிறீர்கள்.. யாரோ ஒருவரிடமிருந்து ஒரு மாயாஜால அரவணைப்பு உங்களுக்கு கிடைக்கிறது என்றால் எப்படி இருக்கும். அதாவது ஒரு ஆண் வந்து 5 நிமிடங்கள் உங்களை அரவணைத்துக் கொள்கிறார். அவர் உங்களிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எந்த விதமான தவறான செயலிலும் ஈடுபடவில்லை. அந்த 5 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் நிம்மதியாக உணர்கிறீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் அவருக்கு 600 ரூபாய் கொடுக்கிறீர்கள். ஆம், இந்த அரவணைத்துக் கொள்ளும் போக்குக்கு 'ஆண் அம்மாக்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆண்-அம்மா (Man-Mum) காரணம் என்ன?
கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் 'ஆண்-அம்மாக்கள்' என்ற போக்கு வேகமாக அதிகரித்துள்ளது. இளம் பெண்கள் 5 நிமிட அரவணைப்புக்கு ஈடாக ஆண்களுக்கு 250 முதல் 600 ரூபாய் வரை செலுத்துகிறார்கள். 'ஆண்-அம்மா' என்ற சொல் சமூக ஊடகங்களில் மிகவும் விவாதிக்கப்படுகிறது. அலுவலக மற்றும் வேலை மன அழுத்தத்தைக் குறைக்க இளம் பெண்கள் 'ஆண்-அம்மா' நம்பியுள்ளனர் எனக் கூறலாம்.
ஆண்-அம்மா (Man-Mum) எனக் குறிப்பிடக் காரணம் என்ன?
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) படி, ஆரம்பத்தில் ஆண்-அம்மா (Man-Mum) என்பது ஜிம்மிற்குச் செல்லும் வலிமையான ஆண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் படிப்படியாக இந்த வார்த்தையின் அர்த்தம் மாறியது. இப்போது ஆண்-அம்மா (Man-Mum) என்பது தாயைப் போல வலிமையான உடலும் மென்மையான இதயமும் கொண்ட ஆண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஆண்-அம்மாக்கள் (Man-Mum) வைரல்
ஆண்-அம்மா (Man-Mum) குறித்து ஒரு பெண் தனது சமூக ஊடக பக்கத்தில், "மன அழுத்தத்தில் என்னை யாராவது அரவணைத்துக் கொண்டால் அதற்கு பணம் செலுத்தத் தயாராக இருப்பதாக" கூறியிருந்தார். 'நான் மேல்நிலைப் பள்ளியில் ஒரு முறை அரவணைக்கப்பட்டேன், அந்த நேரத்தில் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். ஒரு மெட்ரோ நிலையத்தில் ஐந்து நிமிடங்கள் அரவணைக்கலாம் என்று அவர் தனது பதிவில் எழுதினார். இந்த பதிவு வைரலானதை அடுத்து 'மேன்-மம்' (Man-Mum) என்ற போக்கு சீனாவில் வேகமாக வளர்ந்துள்ளது.
ஆண்-அம்மா (Man-Mum) கட்டணம் எவ்வளவு?
'ஆண்-அம்மா' மூலம் பெண், அவனது நடத்தை, பொறுமை, உயரம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆணை தேர்வு செய்யலாம். சந்திப்பதற்கு முன்பு இருவரும் தனிப்பட்ட முறையில் தங்கள் மன அழுத்தங்களை குறித்து பேசிக்கொள்வார்கள். ஆண்-அம்மாக்கள் (Man-Mum) தொடர்பான பெரும்பாலான அரட்டைகள் மெட்ரோ நிலையங்கள் அல்லது ஷாப்பிங் மையங்கள் போன்ற பொது இடங்களில் நடைபெறுகின்றன. ஆண்-அம்மா (Man-Mum) கட்டணம் என்பது ரூ.250 முதல் ரூ.600 (20 முதல் 50 யுவான்) வரை இருக்கும்.
ஆண்-அம்மா (Man-Mum) குறித்து பெண்கள் சொல்வது என்ன?
"ஆண்-அம்மா" மூலம் ஆண்களால் கட்டிப்பிடிக்கப்படுவது அவர்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருவதாக பெண்கள் கூறுகிறார்கள். தற்போது 'மேன்-மம்' (Man-Mum) என்ற போக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க - விமான விபத்துக்கு முன் ரீல்ஸ் செய்த விமான பணிப்பெண்கள்! வைரலாகும் கடைசி வீடியோ..
மேலும் படிக்க - ஆட்டோகாரராக மாறிய ஐடிகாரர்: நெஞ்சை பிசியும் உண்மை கதை, வைரல் ஆகும் போஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









