)
US Women Independence: டேட்டிங் மற்றும் திருமணத்தால் சோர்வடைந்து, அதிகமான அமெரிக்க பெண்கள் தனியாக இருப்பதைத் தேர்வு செய்கிறார்கள் என அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. அதாவது திருப்தியற்ற, புடிக்காத உறவுகளை விட தனியாக, சுதந்திரமாக என்ற போக்கை நோக்கி செல்லும் அமெரிக்கப் பெண்கள் அதிகரித்து வருகின்றன. சரி, ஏன் பெண்கள் தனியாக இருக்க விரும்புகிறார்கள்? அதற்கான காரணம் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
பெண்களிடம் ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது?
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் (The Wall Street Journal) அறிக்கையின்படி, "மாறிவரும் சமூக எதிர்பார்ப்புகள், நிதிப் பாதுகாப்பு மற்றும் பெண்கள் விரும்புவதற்கும் அவர்களுக்குக் கிடைப்பதற்கும் இடையிலான பொதுவான பொருத்தமின்மை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது"
அவர்கள் தங்களைத் தடுத்து நிறுத்தும் ஒரு ஆணுடன் இருப்பதை விட தனியாக இருப்பதையே விரும்புவார்கள்" என்று பழமைவாத சிந்தனைக் குழுவின் இயக்குனர் டேனியல் காக்ஸ் கூறினார்.
டேட்டிங் செய்வதை கைவிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்
பாஸ்டனைச் சேர்ந்த 29 வயதான கணக்காளர் ஆண்ட்ரியா வோர்லிசெக்கிடம் கேட்கும் போது, "டேட்டிங் செய்வதை கைவிட்டு விட்டதாகவும், தற்போது ஒரு வீட்டை வாங்கவும், குழந்தைகளை தானே வளர்க்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் நான் இங்கே உட்கார்ந்து நூறு சதவீதம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இது மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஒரு அமைதி உணர்வு என்று அவர் கூறினார்.
உறவுகளிலிருந்து விலகி இருக்க விரும்பும் பெண்கள்
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட முடிவாகத் தோன்றினாலும், அதிகமான பெண்கள் உறவுகளிலிருந்து சற்று விலகி இருக்க விரும்பவதாக தரவு காட்டுகிறது. தனியாக இருக்க விரும்பும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் திருமணமான வாழ்க்கையை விட மகிழ்ச்சியாக இருப்பதாக நம்புகிறார்கள்.
அதேநேரம், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தனியாக இருக்கும் விரும்பும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றம் பெண்களிடையே ஏற்பட முக்கியக் காரணமாக வளர்ந்து வரும் கல்வி மற்றும் சம்பாதிக்கும் திறன்கள் என தரவு சொல்கிறது.
பெண்கள் அடிமையாக இருக்க விரும்பவில்லை?
ஏனென்றால் 2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 25-34 வயதுடைய பெண்களில் 47% பேர் இளங்கலைப் பட்டம் பெற்றனர். அதே நேரத்தில் 37% ஆண்கள் மட்டுமே இந்தத் தகுதியை பெற்றனர். இந்த இருவருக்கிடையே நட்பு, காதல் மற்றும் திருமணம் நடக்கும் போது, பொருத்தமின்மை இருந்தாலும், ஏற்றத்தாழ்வு, லட்சியம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் சமரசம் செய்ய விருப்பமில்லை என்ற மனநிலைக்கு பெண்கள் செல்கிறார்கள்.
ஆண்கள் குறித்து பெண்கள் கூறியது...
வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் பேசிய பல பெண்கள், "அதிகமான ஆண்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையைப் பற்றி பயப்படுவதாகவோ அல்லது திருமணத்திற்குப் பிறகு வேலையை விட குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவோ தெரிவித்தனர். சில பெண்கள் தங்கள் கணவனை விட அதிகமாகவோ அல்லது சமமாக சம்பாதித்தாலும் இந்த எதிர்பார்ப்புகளை எதிர்கொண்டனர் எனக் கூறியுள்ளனர்.
தனியாக வாழ்வதை தேர்ந்தெடுக்கும் பெண்கள்
இதன் காரணமாக பெண்கள் உறவு அல்லது திருமணத்தைத் தேடுவதிலிருந்து விலக்கி இருக்க விரும்புகின்றன. அதேநேரம் சில பெண்கள் ஹிஞ்ச் மற்றும் பம்பிள் போன்ற செயலிகள் மூலம் அடிக்கடி டேட்டிங் செய்த பிறகும், அதில் சுமார் 1000 மணிநேரங்களைச் செலவிட்ட பிறகு நாங்கள் மீண்டும் தொடங்கிய இடத்திற்குத் திரும்பிவிட்டதாக உணர்ந்ததாகக் கூறியுள்ளனர். சிலர் தனியாக வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் நட்பு மற்றும் சமூகத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ