)
Mars Transit In Sagittarius: செவ்வாய் கிரகப் பெயர்ச்சி என்பது ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைக் குறிக்கிறது. அதனுடன் இந்த நிகழ்வு மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். அந்த வகையில் வரும் டிசம்பர் 7, 2025 அன்று செவ்வாய் கிரகம் தனுசு ராசியில் நுழைந்து ஜனவரி 16, 2026 வரை இந்த ராசியில் இருப்பார். தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும் என்பதால், இந்தப் பெயர்ச்சி பெரிய முடிவுகள், தொலைநோக்கு பார்வை மற்றும் வாய்ப்புகளை பலப்படுத்துகிறது. இந்த நேரம் மேஷம், சிம்மம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும், அதே நேரத்தில் ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மகரம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆற்றல், தைரியம், துணிச்சல் மற்றும் நோக்கம் - இந்த நான்கு குணங்களும் செவ்வாய் கிரகத்தின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. செவ்வாய் குருவால் ஆளப்படும் தனுசு ராசியில் நுழையும் போது, அது சிந்தனையை மட்டுமல்ல, முக்கிய முடிவுகள், பார்வை மற்றும் லட்சியத்தையும் பாதிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் இந்த சிறப்புப் பெயர்ச்சி டிசம்பர் 7 ஆம் தேதி இரவு 8:27 மணிக்கு நிகழ உள்ளது. செவ்வாய் தனுசு ராசியில் வரும் ஜனவரி 16, 2026 வரை இருப்பார். இந்த நேரத்தில், ஆற்றல், வேலையின் வேகம், சிந்திக்கும் திறன் மற்றும் இலக்குகளை அடைய வேண்டும் என்ற ஆசை ஆகியவை பன்மடங்கு அதிகரிக்கும்.
மேஷம் (Aries Zodiac Sign)
மேஷ ராசிக்கு செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சி மிகவும் நல்லதாக இருக்கும். இந்தப் பெயர்ச்சி உங்கள் ராசியின் 9வது வீட்டில் நிகழப் போகிறது, இது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும். புதிய பயணங்கள், கல்வி முடிவுகள் மற்றும் முக்கிய தொழில் நகர்வுகள் நன்மை பயக்கும். எனினும் சில அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம் (Leo Zodiac Sign)
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும், உங்கள் காதல் வாழ்க்கை வலுப்பெறும், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கலை, பொழுதுபோக்கு, ஊடகம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் புதிய வாய்ப்புகளைக் காணலாம்.
கும்பம் (Aquarius Zodiac Sign)
கும்ப ராசிக்காரர்களுக்கு, இந்த செவ்வாய் பெயர்ச்சி உங்கள் சமூக வாழ்க்கையை வலுப்படுத்தும். நீங்கள் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள், மக்கள் உங்கள் வேலையை அங்கீகரிப்பார்கள், மேலும் குழுக்களாக வேலை செய்வதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். இந்த நேரம் சாதனைகளால் நிறைந்திருக்கும், மேலும் பல முடிக்கப்படாத பணிகள் முடிக்கப்படும்.
மீனம் (Pisces Zodiac Sign)
மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் வலுவான தொழில் முன்னேற்றத்தைக் கொண்டுவரப் போகிறது. உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும், பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது, மேலும் முக்கியமானவர்கள் உங்களை ஆதரிப்பார்கள். இருப்பினும், அவசரத்தைத் தவிர்க்கவும், ஏனெனில் பொறுமையின்மை தீங்கு விளைவிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ