நவம்பரில் கிரக நிலை மாற்றம்: 3 ராசிகளுக்கு மகிழ்ச்சி, 2 ராசிகளுக்கு எச்சரிக்கை!

2025 நவம்பரில் மூன்று கிரகங்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ள நிலையில், சில ராசிகள் இதனால் பலன் மற்றும் பின்னடைவை சந்திக்கும். அது என்னென்ன ராசிகள்? அவர்களுக்கு எதில் பலன் கிடைக்கிறது எதில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். 

Written by - R Balaji | Last Updated : Nov 13, 2025, 12:56 PM IST
நவம்பரில் கிரக நிலை மாற்றம்: 3 ராசிகளுக்கு மகிழ்ச்சி, 2 ராசிகளுக்கு எச்சரிக்கை!

ஜோதிடத்தில் வக்ர பெயர்ச்சி என்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஒரு கிரகம் பின்னோக்கி செல்வது போன்ற தோற்றம் வக்ர பெயர்ச்சி எனப்படுகிறது. 2025 நவம்பரில் மூன்று கிரகங்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளன.

Add Zee News as a Preferred Source

குரு பகவான் 

நவம்பர் 11, 2025 அன்று குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் வக்ரமாகி சஞ்சரிக்கிறார். குரு பகவான் சுப பலன்கள் தருவதாகக் கருதப்படுகிறார். அவர் வக்ர நிலையில் இருந்தாலும், பல ராசிகளுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குவார். அதே நேரத்தில் சிலருக்கு குடும்பம் மற்றும் நிதிநிலை விஷயங்களில் மறுபரிசீலனை தேவைப்படலாம். இந்த வக்ர நிலை மார்ச் 2026 வரை நீடிக்கும்.

புதன் பகவான்  

புதன் பகவான் நவம்பர் 10, 2025 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகுகிறார். தகவல், வணிகம் மற்றும் புத்திசாலித்தானத்தின் காரகராக உள்ள இவர் வக்ர நிலையில் குழப்பமான பலன்களை தருவார். தகவல் தொடர்பில் குழப்பங்கள், பயண தாமதங்கள், ஒப்பந்த பிரச்சனைகள் ஏற்படலாம். ரகசிய விஷயங்கள் மற்றும் கூட்டு நிதி தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

சனி பகவான்  

சனி பகவான் நவம்பர் 28, 2025 அன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். நீதி மற்றும் பொறுமையின் காரகராக இருக்கும் இவர் கடந்த ஜூலை மாதம் முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். நிவர்த்தி பிறகு காரியங்களில் முன்னேற்றம், தடைகள் நீக்கம், தெளிவான முடிவு எடுப்புகள் இருக்கும்.

பலன்பெறும் ராசிகள்  

ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப பிரச்சனைகள் தீரும், உறவுகளில் மகிழ்ச்சி, ஆன்மீக வளர்ச்சி, திருமண தடைகள் ஆகியவற்றை நீங்கும்.   

கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும், அரசு வேலை அல்லது போட்டி தேர்வில் வெற்றி, தொழில்-மண வாழ்க்கை மகிழ்ச்சி, நிதிநிலை ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். 

மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கை, உத்தியோக வளர்ச்சி, வருமான உயர்வு, பொருளாதார மேம்பாடு, பழைய முதலீடுகளில் லாபம் போன்றவற்றை கிடைக்கும். 

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்  

மேஷம்: இந்த ராசியில் இருப்பவர்கள் குடும்பம், சொத்து பிரச்சனைகள், தாய் வழி உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும். 

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் தொழிலில் போட்டிகள் ஏற்படலாம். எதிரிகள் அதிகரிக்கலாம், மன அழுத்தம் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

இந்த வக்ர பெயர்ச்சி காலத்தில் ராசிக்காரர்கள் தங்களது முக்கியமான வாழ்க்கை மற்றும் பணியியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜோதிடர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள் மற்றும் சவால்களை சமாளிப்பதில் புத்திசாலித்தனமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க: இந்த 5 ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு சக்தியா? என்ன தெரியுமா?

மேலும் படிக்க: இடம் மாறும் செவ்வாய்.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு பெரிய பிரச்சனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News