3 Zodiac Signs Benefiting From Gaja Kesari Yoga : ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவானை மங்களகரமான மற்றும் தூய்மையான கிரகமாக கருதுகிறோம். இந்த குரு பகவான், ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அந்த ராசியை உடையவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்று பரவலாக நம்பப்படுகிறது. குரு பகவான், தற்போது மிதுன ராசியில் சஞ்சரம் செய்கிறார். 12 ஆண்டுகளுக்கு பின், இந்த ராசியில் இருக்கும் குரு, முன்பை விட இரு மடங்கு வேகமாக நகர்கிறார். எப்போதும், ஆண்டுக்கு ஒரு முறை மாறும் குரு பகவான், இப்போது 5-6 மாதங்களிலேயே மாற இருக்கிறார்.
கஜகேசரி ராஜயோகம்:
இப்போது குரு பகவான் சந்திரனுடன் ஒன்றினைந்து கஜகேசரி யோகம் எனும் பெரும் சக்தி வாய்ந்த ராஜ யோகத்தை உருவாக்க இருக்கிறார். இதன் தாக்கம், அனைத்து ராசி உடைவர்களின் வாழ்விலும் இருக்கும். இதில், சில ராசிகளுக்கு வேலையிலும், தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும். அவர்களுக்கு எதிர்பார்க்காத நிதி கிட்டுவதோடு, அதிர்ஷ்டமும் கூரையை பிய்த்து கொட்டப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பயன்பெறப்போகும் ராசிகள் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களின் முதல் வீட்டில், கஜகேசரி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதையடுத்து, இந்த ராசியை சேர்ந்தவர்கள், எட்டு திக்கில் இருந்து மகிழ்ச்சியான செய்திகளை கேட்க இருக்கின்றனர். படிக்கும் மாணவர்களுக்கு, தங்கள் கல்வியில் ஆர்வம்பெருகும். திருமணத்திற்கு வரன் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கலாம். ஒரு சிலருக்கு உயர்ப்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் தொடங்கி இருப்பவர்கள் திடீர் நிதி ஆதாயங்களை பெறலாம். கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு அது தொடர்பான பிரச்சனை அகலலாம். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை நீங்கலாம். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி பெருகலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியின் இரண்டாவது வீட்டில் ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால், ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கப்போகிறது. வழிவழியாக குடும்பத்தொழில் செய்து வருபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க இருக்கிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகுவதோடு, வேலை பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை குறைந்து வருமானம் பெருகலாம். உறவில் இருந்து வந்த சிக்கல் விலகலாம். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தொகை வரலாம். இந்த ராசி உடையவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும்-மரியாதையும் உயர வாய்ப்புள்ளது.
துலாம்:
துலாம் ராசியின் 9வது வீட்டில், கஜகேசரி யோகம் தோன்ற இருக்கிறது. இதையடுத்து, இந்த ராசியை சேர்ந்தவர்களின் வாழ்க்கையில அவர்களுக்கு சாதகமான பல விஷயங்கள் நடக்க இருக்கின்றன. இவர்களுக்கு இனி வரும் காலங்களில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, இத்தனை நாட்களாக எடுத்து வந்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கலாம். இத்தனை நாட்களாக இவர்களின் வாழ்வில் நிலுவையில் இருந்த முக்கிய வேலை வெற்றிகரமாக முடியலாம். கல்வி சார்ந்து இருப்பவர்கள் சிறந்து விளங்குவர். அலுவலகத்தில் சிலர் தங்கள் வேலைக்காக பாராட்டை பெறலாம். முட்டுக்கட்டையாக இருந்த தடைகள் நீங்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 138 நாட்கள் சனி வக்ர பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை, கவனமாக இருக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









