தவறான முடிவுகளால் பிரச்சனையில் சிக்கும் 4 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?

 Zodiac Signs Bad At Making Decisions : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், எந்த முடிவை எடுத்தாலும் தவறாகத்தான் இருக்குமாம். அவர்கள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 17, 2025, 04:29 PM IST
  • முடிவெடுக்க சிரமப்படும் ராசிக்காரர்கள்
  • இந்த 4 பேர்தான்..
  • யார் யார் தெரியுமா?
தவறான முடிவுகளால் பிரச்சனையில் சிக்கும் 4 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?

 Zodiac Signs Bad At Making Decisions : நமது வாழ்க்கை எந்த திசையை நோக்கி செல்லப்போகிறது என்பதை, நாம் எடுக்கும் சில முடிவுகளே நிர்ணயிக்கும். ஒரு சிலர், தாங்கள் முடிவெடுக்கும் முன்பு ரொம்ப யோசிப்பர். ஆனால் முடிவெடுத்த பின்பு முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகவே அமையும். ஆனால், ஒரு சிலர் எந்த முடிவு எடுத்தாலும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் கொண்டதாகவே அமையும். அப்படி முடிவெடுப்பவர்கள், 12 ராசிகளில் சில குறிப்பிட்ட ராசிகளை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

மீனம்:

மீன ராசியை சேர்ந்தவர்கள், பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்களாம். இதனால், கடினமான தருணங்களில் சரியான முடிவெடுப்பது என்பது இவர்களுக்கு வராமலேயே போவதாக கூறப்படுகிறது. இவர்களின் உள்ளுணர்வானது வலுவானதாகவே இருந்தாலும், அதை எப்போதும் நம்பிவிடவும் முடியாது. இவர்கள், தங்கள் மூளை சொல்வதை கேட்பதா அல்லது மனது சொல்வதை கேட்பதா என்பது போன்ற போராட்டத்திற்கும் ஆளாகின்றனர். இதனால், பெரும்பாலும் இவர்கள் எடுக்கும் முடிவுகள் இவர்களுக்கு எதிரானதாக முடிந்து விடலாம்.

கடகம்:

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இரக்க குணம் என்பது அதிகமாகவே இருக்குமாம். பிறர் குறித்து அதிகம் யோசிக்கும் இவர்களுக்கு ஏதேனும் முடிவெடுக்க வேண்டும் என்கிற நிலை வரும் போது, அதில் பிறர் சம்பந்தப்பட்டிருந்தால் இவர்கள் அந்த முடிவை எடுக்க சிரமப்படுவார்கள். அதே போல, தங்களின் அன்புக்குரியவர்களுக்கு மிகுந்த இடம் கொடுக்கும் இவர்கள், அவர்களை மகிழ்விக்க முடியாத நிலை வரும் போது, அதற்கான முடிவை தாங்களாக எடுக்காமல், அவர்களுக்காக எடுப்பார்களாம். இதனால் அவர்கள் பலவித பிரச்சனைகளை சந்தித்தாலும் அதனை பெரிதும் கவனத்தில் கொள்ளாமல் இருக்கின்றனர்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் எந்த விஷயத்தையும் ஆழ்ந்து, ஆராய்ச்சி செய்து யோசனை செய்பவர்கள். இவர்கள், ஒரு விஷயத்தை பல வித கண்ணோட்டங்களில் இருந்து பார்த்து அதை எடை போடும் இவர்கள் இப்படி அனைவரது கருத்துகளாலும் மனம் மாறுவார்கள். இதனால், அவர்களால் சுயமாக யோசித்து சுயமாக சிந்திக்க முடியாமல் செல்லும் நிலை ஏற்படும். தன் முடிவால் பிறருக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயமே இவர்களை சரியாக எந்த முடிவையும் எடுக்க விடாமல் செய்யுமாம். இந்த முடிவால் இவர்கள் பிற்காலத்தில் வருத்தப்படவும் வாய்ப்புண்டு.

மிதுனம்:

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இவர்களுக்கு எந்த மனிதர்களுக்கு அல்லது சூழலுக்கு ஏற்றவாறும் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு நல்ல திறன்தான் என்றாலும், இதுவே அவர்களை பலமுறை சரியான முடிவை எடுக்க விடாமல் செய்து விடும். அதே போல, இவர்கள் அனைத்து விஷயங்களையும் ரொம்ப யோசிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த யோசனைகளே, இவர்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் இருக்க விடாது. இதனால், இவர்களால் எந்த நிலையிலும் இறுதி முடிவை எடுக்க முடியாது. அதற்கு இவர்களின் மனமும் இடம் கொடுக்காது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

மேலும் படிக்க | எதையும் எதிர்பாராமல் உதவி செய்யும் ராசிகள்! யார் யார் தெரியுமா?

மேலும் படிக்க | உதயமாகும் சுக்கிரன்... இந்த 3 ராசிகளுக்கு விடிவு காலம் வந்துவிட்டது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News