காதலில் கண்ணியம் தவறாத 4 ராசிக்காரர்கள்! எப்போதும் கடமை, கட்டுப்பாடு..யார் தெரியுமா?

4 Zodiac Signs That Are The Most Loyal : இருக்கும் 12 ராசிகளில், ஒரு சில ராசிகள் மட்டும்தான் நேர்மை, கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்றிருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 18, 2025, 05:15 PM IST
  • நேர்மை குணம் கொண்ட ராசிகள்
  • 4 ராசிகளுக்கும் எப்போதும் கடமைதான்..
  • யார் யார் தெரியுமா?
காதலில் கண்ணியம் தவறாத 4 ராசிக்காரர்கள்! எப்போதும் கடமை, கட்டுப்பாடு..யார் தெரியுமா?

4 Zodiac Signs That Are The Most Loyal : மனிதர்களாக பிறந்த அனைவருக்குள்ளும் நேர்மை என்பது இருக்க வேண்டிய ஒன்று. ஆனால், இன்றைய நிலை அப்படி கிடையாது. இந்த உலகமே பொய்யும்-பித்தலாட்டமும் நிறைந்த இடமாக மாறிவிட்டது. ஆனால்,இந்த நிலையிலும் கூட ஒரு சில ராசிக்காரர்கள், தங்களின் நேர்மையில் இருந்து தவறாதவர்களாக இருப்பார்களாம். அவர்களுக்கு கடமையும் கண்ணியமும் இரு கண்களாக இருக்குமாம். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

கடகம்:

கடக ராசிக்காரர்கள், பிறக்கும் எப்படி இருப்பார்களோ தெரியாது. ஆனால், வளரும் போது கண்டிப்பாக அவர்கள் பொறுப்புணர்வுடன் வளர்வார்களாம். இவர் ஒருவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி, ஒருவருடன் காதல் உறவில் இருந்தாலும் சரி, ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் சரி வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், யாருடன் இருந்தாலும் அவர்களுக்கு ரொம்ப உண்மையானவர்களாக இருப்பார்களாம். இவர்களை நம்பி என்ன செய்தாலும், என்ன கூறினாலும், அவர்கள் ஏமாற்ற மாட்டார்களாம். 12 ராசிகளுள் இவர்கள் மிகவும் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்களாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, “சிடு மூஞ்சு போல..” என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால், இவர்களுடன் பழகிய பின்புதான் இவர்கள் “அட இவ்ளோ நல்லவங்களா” என்று தோன்றும். இவர்களை கவனித்து பார்த்தால் தெரியும், இவர்களுக்கு பெரிதாக நண்பர்கள் எல்லாம் இருக்க மாட்டார்கள். ஆனால், இவர்களுக்கு 4 நண்பர்களை வைத்திருந்தாலும் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பவர்களாக இருப்பர்.  அவர்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் செத்தாலும் அவர்களிடம் பேச மாட்டார்கள். ஆனால், இந்த உலகமே எதிர்த்து வந்தாலும் பிடித்தவர்களுக்கு ஒன்று என்றால் அவர்களுக்குதான் துணையாக இருப்பார்கள்.  உறவுகளில் மட்டுமல்ல, இவர்கள் செய்யும் வேலையிலும் கூட உண்மையும் நேர்மையும் அடங்கியிருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களை, பலர் பார்ப்பதற்கு முன்னரே கணித்து விடுவர். அவர்களை பார்க்கும் போது, யாரை பற்றியும் யோசிக்காமல் தனக்கு தேவைப்பட்ட விஷயத்திற்கு அடம் பிடிக்கும் மனிதர்கள் போல தெரியும். ஆனால், உண்மையில் இவர்கள் தங்களுடன் பழகுபவர்களுக்கு மிகவும் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். தன் அன்பையும் நேரத்தையும் யாருக்கு கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க கூடாது என்பதிலும் இவர்கள் மிக மிக தெளிவாக இருப்பார்கள். தனக்கு ஒன்று என்றால் துடிக்கிறார்களாே இல்லையா, தன்னை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது சிறு கீறல் பட்டாலும் துடித்து போய் விடுவார்கள். அதே போல, தன்னை நம்பி ஒருவர் ஏதேனும் வேலை கொடுத்தாலும் அதனை உண்மையாக முழு மனதுடன் செய்து முடிப்பர்.

சிம்மம்:

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள், தன்னை யாரேனும் குறை சொன்னால் அல்லது தவறாக பேசினால் கூட அமைதியாக இருந்து விடுவர். ஆனால், தன்னை சேர்ந்தவர்களை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் அவர்களிடம் சண்டைக்கு நிற்பர். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெயருக்கு ஏற்றவாறு தைரியத்துடனும் செயல்படுவர். இவர்களின் இந்த தைரியமே இவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு அரணாக இருக்கும். எனவே, இவர்களுடன் இருப்பவர்கள் “எனக்கு ஒரு பாதுகாவலர் இருக்கிறார்” என்று நன்றாகவே நம்பி இருக்கலாம். அதே போல, செய்யும் தொழிலிலும், வேலையிலும் கூட நீதி தவறாமல் இருப்பார்களாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

மேலும் படிக்க | எதையும் எதிர்பாராமல் உதவி செய்யும் ராசிகள்! யார் யார் தெரியுமா?

மேலும் படிக்க | தவறான முடிவுகளால் பிரச்சனையில் சிக்கும் 4 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News