நரி போன்ற தந்திர குணம் காெண்ட 4 ராசிகள்! யாரெல்லாம் தெரியுமா?

4 Zodiac Signs That Has Strategist Mind : சில ராசிக்காரர்கள், பிறப்பிலேயே தந்திர குணம் நிறைந்தவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 19, 2025, 07:00 PM IST
  • தந்திர குணம் கொண்ட ராசிகள்
  • விருச்சிகமும் லிஸ்டில் உள்ளது
  • பிறர் யார் யார் தெரியுமா?
நரி போன்ற தந்திர குணம் காெண்ட 4 ராசிகள்! யாரெல்லாம் தெரியுமா?

4 Zodiac Signs That Has Strategist Mind : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், பிறப்பிலேயே சிறந்த குணாதிசயத்துடன் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது. இது அவர்கள் பிறந்த நேரம் அல்லது கிரகப்பலன்களை வைத்து மாறுபடலாம். இந்த ராசிக்காரர்கள், தங்களின் எதிர்காலத்தை கருதி செயல்படுவதாலும், வேகமாக யோசிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பதாலும் தந்திர குணம் இருப்பவர்களாக பார்க்கப்படுகின்றனர். இதில் 12 ராசிகளில் சில ராசிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவர்கள் யார் தெரியுமா? 

விருச்சிகம்: 

விருச்சிக ராசி காரர்கள், இந்த விஷயத்தையும் ஆழ்ந்து யோசிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள், இதை எடுத்துக் கொண்டாலும் அதன் மீது கவனம் சிதறாமல் நினைத்த காரியத்தை சரியாக நடத்தும் கொடுக்கும் வரை ஓய மாட்டார்களாம். அதேபோல இவர்களுக்கு, தந்திரமாக யோசித்து ஒரு காரியத்தை எப்படி முடிக்க வேண்டும் என்றும் தெரியும் எனக்கு கூறப்படுகிறது. இவர்களுக்கு எந்த ஒன்று சக்தியும் வெளியில் இருந்து தேவைப்படாதாம். 

தன்னை நோக்கி என்ன சவால் வரும் என்பதை முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்ளும் இவர்கள் அதற்கான பேக்-அப் திட்டத்தையும் வகுத்து வைத்துக் கொள்கின்றனர். தங்களின் ஆழ்மனது சொல்வதைக் கேட்கும் அவர்கள், சூழல் அறிந்து அதனை தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வர். இதுவே பிறரும் இவர்கள் மீது நம்பிக்கை வைக்க காரணமாக இருக்கிறது.

மகரம்: 

மகர ராசிக்காரர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்களாம். எதனை எடுத்தாலும் அதற்கு நீண்ட கால திட்டம் வகுப்பும் இவர்கள், எது ப்ராக்டிகலாக வேலைக்காகவோ அந்த திட்டத்தை மட்டுமே வகுப்பார்களாம். அதேபோல எதைப் பேசினாலும் நேர்பட பேசும் இவர்கள், தனக்கு வேண்டுமென்றால் தனது காரியம் ஒன்று பிறரால் ஆக வேண்டும் என்றால், அதனை நடத்த இப்படி பேச வேண்டும் என்று தந்திர குணம் தெரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்களாம். 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களின் கண்களில் இருந்து எந்த விஷயமும் தப்பிக்க முடியாது என கூறப்படுகிறது. எந்த முடிவை எடுத்தாலும் ஆழ்ந்து யோசித்து ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்கும் இவர்கள், யார் தனக்கு பிரச்சினையாக வருவார் என்பதையும் கணித்து விடுவர். பின்பு அவர்களுக்கு ஏற்றவாறு, சில விஷயங்களை செய்து அவர்களை தன் ஆட்டத்திற்கு ஆடவைப்பது இவர்களுக்கு பிடிக்குமாம். அதுமட்டுமல்ல, இவர்களிடம் தவிர்க்க முடியாத ஒரு வித ஈர்ப்பு இருக்குமாம். இதுவே பிறரை இவர்களை நோக்கி பல நல்ல விஷயங்களுக்காக காந்தம் போல ஈர்க்க வைப்பதாக கூறப்படுகிறது. 

மிதுனம்:

மிதுன ராசியை சேர்ந்தவர்கள், சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வார்கலாம். இவர்கள், எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனை பல கோணங்களில் இருந்து யோசிப்பார்களாம். மேலும், ஒரு கட்டத்திற்கு மேல், தனது பேச்சுத்திறமையால், கரையாத கல் மனம் கொண்டவர்களையும் கூட கரைத்து விடுவார்களாம். அதே போல, இவர்களுக்கு, எப்படி ஒருவரை திட்டம் போட்டு கவிழ்க்க வேண்டும் என்பதும் கூட தெரியும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இந்த 5 ராசிகளை கொண்ட பெண்கள் கணவர்களுக்கு அதிக அதிர்ஷ்டத்தை கொடுப்பார்கள்!

மேலும் படிக்க | மர்மமான குணாதிசயம் கொண்ட 4 ராசிகள்! இவங்களை யாராலும் புரிஞ்சிக்கவே முடியாது..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News