எத்தனை தோல்விகள் வந்தாலும் மாஸாக கம்-பேக் கொடுக்கும் 4 ராசிகள்! யார் தெரியுமா?

Zodiac Signs That Will Give Stronger Come Back After Setbacks : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், வாழ்க்கையில் தனக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் மாஸாக கம்-பேக் கொடுப்பர். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2025, 06:11 PM IST
  • கம்-பேக் கொடுக்கும் ராசிகள்!
  • என்ன சவால் வந்தாலும் எதிர்கொள்வர்..
  • யார் யார் தெரியுமா?
எத்தனை தோல்விகள் வந்தாலும் மாஸாக கம்-பேக் கொடுக்கும் 4 ராசிகள்! யார் தெரியுமா?

Zodiac Signs That Will Give Stronger Come Back After Setbacks : வாழ்க்கை என்பது அனைவருக்கும் பஞ்சால் ஆன மெத்தை போல இருக்காது. பலருக்கு அது இன்னல்களும் துன்பங்களும் நிறைந்ததாக இருக்கலாம். ஒரு சிலருக்கு வாழ்க்கை வலியும் வேதனையும் நிறைந்ததாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியான தருணங்களே இருக்காததாக இருக்கும். எது எப்படி இருப்பினும் ஒரு சில பேர் மீண்டும் எழுந்து வந்து கம்-பேக் கொடுப்பதை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இதோ இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்குமாம். வலிமையான மனம் படைத்த இவர்கள் தங்களை நோக்கி எது வந்தாலும் அதனை எதிர்த்து போராடும் நம்பிக்கையுடையவர்கள். தங்களுக்கும் சுய ஒழுக்கத்தை பின்பற்றும் அவர்கள், செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்களாம். அதேபோல வாழ்க்கையை நடைமுறை சிந்தனைகளும் எதிர்கொள்வார்கள். 

பெரிய பெரிய கனவுகளோடு வாழும் இந்த ராசிக்காரர்களுக்கு, தன் வாழ்வில் வரும் சிறு சிறு தடைகள் ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது. தன்னை நோக்கி எந்த சவால் வந்தாலும் அதனை எதிர்த்து போராடும் இவர்கள் வாழ்வில் எவ்வளவு கீழே சென்றாலும் மீண்டும் மேலே வந்து விடுவர்.

விருச்சிகம்:

இரும்பு போன்ற மனம் படைத்த விருச்சிக ராசிக்காரர்கள், இந்த ஒரு விஷயத்தை ஆர்வத்துடன் எதிர்கொள்வர். உனத்திறன் அதிகம் கொண்ட இவர்கள், அனைத்தையும் உள்ளார்ந்து யோசிப்பார்கள். தனது வாழ்வில் ஏதேனும் கடினமான விஷயங்கள் நடக்கும் போது ஆரம்பத்தில் அவர்கள் உடைந்து தான் போவார்கள். ஆனால் அதையும் கடந்து வந்துவிடலாம் என்ற தைரியம் அவர்களுக்குள் இருக்கும்.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இறந்து போய் மீண்டும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல இவர்களது குணாதிசயம் இருக்கும். வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என இவர்களுக்கு தோன்றும் தருவாயில் தான், புதிதாக பல தொடக்கங்கள் தோன்றும். அப்படி எந்த தொடக்கமும் ஏற்படவில்லை என்றாலும் கூட மனம் தளராமல் போராடிக் கொண்டே இருப்பர். தனக்கு வாழ்வில் கிடைத்த படிகளை பாடங்களாக மாற்றி அதன் மூலம் தன்னை மாற்றிக்கொள்வர்.

சிம்மம்:

சிம்ம ராசி காரர்களை பிறக்கும்போதே தலைமைத்துவத்துடன் பிறந்த ராசிக்காரர்கள் என்று சிலர் கூறுவர். வாழ்க்கை இவர்களை எவ்வளவு கீழே தள்ளினாலும் இவர்களது பெருமை  கீழேயே இருக்க விடாது. தனக்கு வாழ்வில் ஏற்படும் துன்பங்களை தோல்வியாக கருதாமல் அதை வெறும் தற்காலிக  பின்னடைவாக மட்டுமே கருதுகின்றன. 

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள், துன்பம் வரும் வேளையில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதில் தங்களை இன்னும் வலிமைப்படுத்திக் கொள்வர். வெற்றி பெற என்ன வழி, வாழ்வில் மீண்டும் எழுந்து வர என்ன செய்ய வேண்டும் என்பது இவர்களது சிந்தனையாக இருக்கும். இது போன்ற மனநிலை இவர்களை மாஸான கம்-பேக் கொடுக்க வைக்கும்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்குள் எப்போதும் ஒரு நெருப்பு எரிந்துக்கொண்டே இருக்குமாம். இந்த நெருப்பு, அவர்கள் வாழ்வில் எந்த கட்டத்தில் இருந்தாலும் அவர்களை கீழேயே இருக்க விடாதாம். பயமற்றவர்களாக விளங்கும் இந்த ராசியை சேர்ந்தவர்கள், தன்னை நோக்கி எந்த சவால் வந்தாலும் அதனை நேருக்கு நேராக மோதுவார்களாம்.

தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்து இவர்கள் ஒரு போதும் கலங்கவே மாட்டார்கள். அதற்கு பதிலாக, இன்னும் பலமாக கம்-பேக் கொடுத்து, மன உறுதியுடன் இருப்பார்கள். எங்காவது தவறு நேர்ந்தாலும், அதனை சரி செய்து கொண்டு மீண்டும் தனது வெற்றி இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவார்கள். இது, அவர்களை இன்னும் வலுவாக கம்-பேக் கொடுக்க செய்யும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் மார்ச் 30 ஞாயிறு : சனிப்பெயர்ச்சிக்கு பிறகு முதல் நாள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: இனி இந்த ராசிகள் பாடாய் படப் போகிறார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News