மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை பெறும் ‘இந்த’ 5 ராசிகள்! என்னென்ன தெரியுமா?

Zodiac Signs That Will Have Happy Married Life : ஒரு சில ராசிக்காரர்களுக்கு, திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையே மகிழ்ச்சியாக மாறிவிடுமாம். அது என்னென்ன ராசிகள் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2025, 04:46 PM IST
  • திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் ராசிகள்..
  • சிலர் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பார்களாம்..
  • அவர்கள் யார் யார் தெரியுமா?
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை பெறும் ‘இந்த’ 5 ராசிகள்! என்னென்ன தெரியுமா?

Zodiac Signs That Will Have Happy Married Life : ஒருவரது வாழ்க்கையில் முக்கியமான தருணமாக அமைகிறது திருமணம். சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தால், கண்டிப்பாக ஒருவரது வாழ்க்கை மேலையும் ஏறலாம் அல்லது கீழேயும் இறங்கலாம். ஒரு சில ராசிக்காரர்களின் கிரக பலன்களின்படி, திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா? 

Add Zee News as a Preferred Source

கடகம்:

சந்திரனால் ஆளப்படும் இந்த கடக ராசிக்காரர்கள், குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்களாம். இவர்களால் தனக்கு பிடித்தார் போல பாதுகாப்பான சூழ்நிலை நிறைந்த ஒரு குடும்பத்தையும் உருவாக்க முடியும். இதுவே இவர்களை சிறந்த வாழ்க்கை துணையாகவும் மாற்றுகிறது. அது மட்டுமின்றி இவர்கள் உணர்வு ரீதியாக ஆதரவு கொடுப்பவர்களாகவும் அன்பு காட்டுவதில் சிறந்த விளங்குபவர்களாகவும் இருப்பார்கள். இது இவர்களின் நீண்ட கால திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அமைக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

துலாம்: 

சுக்கிரனால் ஆளப்படும் இந்த துலாம் ராசிக்காரர்கள் தங்களது வாழ்வில் எப்போதும் தனக்கும் தன்னை சேர்ந்தவர்களுக்கும் சம உரிமை மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தனது துணையுடன் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அது குறித்து முழுமையாக பேசி சமரசத்தை முன்னிறுத்துவர். இந்த சம உரிமை, சம மதிப்பு உள்ளிட்டவை இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. 

ரிஷபம்: 

உறுதியான மனமும் நம்பகத்தன்மையும் உடைய குணாதிசயமும் கொண்டவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்கள் தங்களது துணைக்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஆதரவாக நிற்பதோடு நம்பிக்கையும் கொடுப்பர். இவர்கள் எப்போதும் தனது நிலை சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பர். இதுவே இவர்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக எடுத்துச் செல்ல உதவும். 

தனுசு:

சாகச விரும்பிகளாக சுற்றும் தனுசு ராசிக்காரர்கள், வாழ்க்கையை பாசிட்டிவான கண்ணோட்டத்துடன் பார்க்க நினைப்பார்கள். இவரை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் அவர் கண்டிப்பாக ஆனந்தம், புதுமை, மகிழ்ச்சி நிறைந்த மன வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் என்று அர்த்தம். எந்த விஷயம் ஏற்பட்டாலும் அதனை ஒரு வெளிச்ச தோற்றத்திலேயே பார்க்கும் இந்த தனுசு ராசிக்காரர்கள் தங்களது மணவாழ்க்கையில் ஏற்படும் கசப்புகளை கூட இப்படியே பார்ப்பார்கள். இதுவே என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை எளிதில் தீர்க்க உதவும். அதனால் மன வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். 

மீனம்:

மீன ராசிக்காரர்கள் இயற்கையாகவே காதல் மனது கொண்டவர்களாக இருப்பார்கள். இதில் உணர்ச்சி வசப்படக்கூடிய ராசிக்காரர்கள் ஆன இவர்கள், பிறர் மனதை புண்படுத்தாதவாறு பேசுவார்கள். பிறரது உணர்வை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இவர்கள், தனது திருமண வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியான பந்தம் பலமாக இருக்க வேண்டும் என நினைப்பர். இதனாலையே பல பிரச்சனைகள் பாதியில் தீர்ந்துவிடும். மீன ராசிக்காரர்கள், நன்கு கனவு காணும் தன்மை கொண்டவர்கள். இதுவே இவர்களின் திருமண வாழ்க்கையை பன்மடங்கு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என கூறப்படுகிறது.

பொறுப்பு தூறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News