6 Zodiac Signs That Gets Angry Easily : கோபம் என்பது அனைவருக்கும் உள்ளம் இருக்கும் ஒரு குணம் ஆகும். சிரிப்பு, அழுகை, பதற்றம் போல இந்த கோபத்தை சிலர் பெரிதாகவும் சிலர் சிறிதாகவும் வெளிகாட்டுவர். ஒரு சில பேரை கவனித்தால் அவர்கள் அடிக்கடி கோபம் வரும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனாலேயே என்ன பேசினாலும் அவர்களிடம் பார்த்து பேச வேண்டியதாக இருக்கும். அப்படி தொட்டதற்கெல்லாம் எல்லாம் கோபப்படும் சில ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
மீனம்:
மீன ராசியை சேர்ந்தவர்கள் சாதாரண சமயத்தில், அனைவரிடமும் நட்பாகவும் அன்பாகவும் பழகுபவர்களாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்து விட்டால் இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாதாம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக இவர்கள் உடல்ரீதியாக யாரையும் துன்புறுத்த மாட்டார்கள் என்றாலும், வார்த்தையால் காயப்படுத்த வாய்ப்புள்ளது. ஒரு சில சமயங்களில் இந்த கோபம் பெரிய அழுகையாகவும் வெளிப்படலாம். இவர்கள் தான் மதிக்கப்படாதது போலவும் தனது உணர்ச்சிகள் எங்கும் கேட்கப்படாதது போலவும் தோன்றினால் அவர்களுக்கு கோபம் வரும்.
விருச்சிகம்:
தான் எது சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும் ராசியை சேர்ந்தவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். அவர்களுக்கு ஏதேனும் உன்னால் கூட காயம் ஏற்படுத்திய நபரை சும்மா விட்டுவிடுவார்கள். ஆனால் தனது அன்புக்குரியவருக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் பிரச்சனை என்று வந்துவிட்டால் அந்த பிரச்சனைக்குரிய நபரை சும்மாவே விட மாட்டார்கள். இவர்களுக்கு நினைவுத்திறனும் அதிகம். ஏதேனும் ஒரு சண்டையில் நீங்கள் இவரை காயப்படுத்துமாறு எதையாவது சொல்லி இருந்தால், அடுத்த சண்டையில் உங்களை அதையே சொல்லி காயப்படுத்துவார். இவர்களுக்கு கோபம் என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட உணர்வு போல. அனைவரிடமும் அதை காண்பித்து விடமாட்டார்கள். ஆனால் அந்த கோபத்தை பார்ப்பவர்கள் அதன் பிறகு அவர்களுடன் இருக்கவே மாட்டார்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இலக்கு உடையவர்களாகவும், தான் நினைத்ததை அடைப்பவர்கள் ஆகவும் இருப்பார்களாம். ஆனால் இதை அடைய விடாமல் யாரும் தடுப்பதற்காக பயமுறுத்தினாலோ தடையாக இருந்தாலும் இவர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். எளிதில் கோபப்படும் குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அடுத்த நாளே அந்த சண்டையாயோ கோபத்தையும் மறந்து விட்டு சகஜமாக மாறிவிடுவர்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த உலகில் யாரை காட்டிலும் தன்னைத்தான் முக்கியமான நபராக கருதுவர். இருப்பினும் இவர்கள் பல நேரங்களில் தவறு செய்வதுண்டு. அவர்களின் தவறையோ, சில உண்மைகளையோ இவர்களிடம் உரக்க கூறினால் அவர்களுக்கு சட்டென கோபம் வந்துவிடும். அப்படி கோபம் வந்துவிட்டால் அன்புக்குரியவராகவே இருந்தாலும் அவர்களை வேண்டாம் என தூக்கி போட்டு விடுவார்களாம். இவர்களின் கோபம், மிகக் கொடுமையானதாக இருக்குமாம்.
மிதுனம்:
எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டும், சிந்தனையில் ஆழ்ந்தும் இருப்பவர்கள் மிதுன ராசிக்காரர்கள். சாகச குணம் நிறைந்த இவர்கள், கற்பனை வளம் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம். ஆனால், தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என யாராவது வந்து அட்வைஸ் செய்தால் அவர்களை முகத்தில் அடித்தது போல இவர்களுக்கு பேச தெரியும். எனவே, இவர்களின் சுதந்திரத்தில் யாரும் தடையிடக்கூடாது.
மேஷம்:
இயற்கையாகவே நகைச்சுவை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், மேஷ ராசியை சேர்ந்தவர்கள். ஆனால், யாராவது தன்னை கோபப்படுத்தி விட்டால் அவர்கள் வாயில் இருந்து சிரிக்க வைக்கும் வார்த்தை வராது, அழ வைக்கும் வார்த்தைதான் வரும். ஆனால் அப்படி கோபப்பட்டு ஏதேனும் பேசி விட்டாலும் இவர்கள் தான் அப்படி பேசியதற்காக வருத்தப்படுவார்கள். காரணம், இவர்களிடம் அன்பும்-கருணையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே, அவர்கள் அந்த கோபத்தில் இருந்து சரியாக அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து விட வேண்டும். அவர்களே சிறிது நேரத்தில் சரியாகி விடுவர்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஆனி 3 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ