Aadi Pooram 2025: ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூரம்; வளையல் மாலை போட உகந்த நேரம் எது

Aadi Pooram 2025: ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 28, 2025, 01:23 PM IST
  • ஆடிப்பூரம் (Aadi Pooram) பல்வேறு சிறப்புகளை உடையது.
  • அம்பாளின் அனுக்கிரகம் மிகுந்த நாள்களில் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமானது.
Aadi Pooram 2025: ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூரம்; வளையல் மாலை போட உகந்த நேரம் எது

Aadi Pooram 2025: ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.

Add Zee News as a Preferred Source

ஆடிப்பூரம் (Aadi Pooram) பல்வேறு சிறப்புகளை உடையது. அம்பாளின் அனுக்கிரகம் மிகுந்த நாள்களில் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமானது.

ஆடிப்பூர விரத வழிப்பாடு

ஆடிப்பூரத்தன்று காலையிலேயே எழுந்து நீராடி தூய உடை அணிந்து விரதம் இருந்து அம்பாளுக்கு உகந்த பால்பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். \அம்பாளுக்கு பாராயணம் செய்து நெய் விளக்கேற்றி வழிபடலாம். இந்த தினத்தில் புதிய வளையல்களை எடுத்துப் பூஜை அறையில் வைத்துப் பின் யாரேனும் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வழங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் வறுமைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்

ஆடிபூரம் மஹாலக்ஷ்மி அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம். ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் வழிபாடு செய்வது மிகவும் அவசியம். குறிப்பாகத் திருமண வரம் வேண்டுபவர்கள் கட்டாயம் அன்னை அருளிய திருப்பாவைப் பாடல்களை ஆடிப்பூர நாளின் காலையில் எழுந்து பாராயணம் செய்ய வேண்டியது அவசியம். ஆடிப்பூர தினம் என்றில்லை, நாளுமே திருப்பாவைப் பாடல்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஆடிப்பூரம் வளையல் மாலை

ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். இந்த ஆடிப்பூரத்தன்று வண்ண வண்ண வளையல்களை மாலையாக கோர்த்து கோயில்களிலோ வீடுகளில் உள்ள அம்மன் படங்களுக்கோ மலையாக போடலாம். ஆடி பூரத்தன்று அம்பிகையை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். அன்றைய தினம் நாக சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. எனவே இந்த ஆடிப்பூரத்தன்று நாகதேவதைகளையும் வணங்குவது நல்லது.

11வது நட்சத்திரம் 
27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரமாக வருவது பூரம் நட்சத்திரம் ஆகும். இது சிம்ம ராசிக்குரிய நட்சத்திரம் ஆகும். கிரகங்களில் செல்வ செழிப்பு, சுக போக வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். அவரை அதிபதியாக கொண்ட நட்சத்திரம்தான் பூரம்.

மேலும் படிக்க | ஆடி மாதம் 2025: ஆடி மாத சிறப்புகள் மற்றும் கொண்டாடங்களின் முழு பட்டியல்

மேலும் படிக்க | ஆடி அமாவாசை 2025: நாள், நேரம், சிறப்பு, விரத பலன்கள், செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News