100 ஆண்டுக்குப் பிறகு, அட்சய திருதியை நாளில் மங்கள நிகழ்வு, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மாளவியா மற்றும் கஜகேசரி ராஜ யோகம் உருவாகப் போவதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 21, 2025, 08:20 PM IST
  • இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம், நல்ல அதிர்ஷ்டம் உண்டாகலாம்.
  • கஜகேசரி மற்றும் மாளவ்ய ராஜயோகம்.
  • அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
100 ஆண்டுக்குப் பிறகு, அட்சய திருதியை நாளில் மங்கள நிகழ்வு, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Auspicious Day On Akshaya Tritiya: பஞ்சமகாபுருஷ மற்றும் கஜகேசரி ராஜயோகம் மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாகும். இந்த யோகம் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால், அந்த ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் அந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும். இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் கஜகேசரி, மாளவ்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. இதில் கஜகேசரி ராஜயோகம் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் ஏற்படும். அதேசமயம், சுக்கிரன் உச்ச ராசியில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு ராஜயோகங்களின் உருவாக்கத்தின்  காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கலாம். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம், நல்ல அதிர்ஷ்டம் உண்டாகலாம். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

ரிஷபம்: கஜகேசரி மற்றும் மாளவ்ய ராஜயோகத்தின் உருவாக்கத்தின் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏனென்றால் இந்த கஜகேசரி ராஜயோகம் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் லக்ன ஸ்தானத்தில் உருவாகப் போகிறது, அதே நேரத்தில் மாளவ்ய ராஜயோகம் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பெறலாம். வணிக ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புகழும் மரியாதையும் கிடைக்கும்.

தனுசு: கஜகேசரி மற்றும் மாளவ்ய ராஜயோகத்தின் காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏனென்றால் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கை தனுசு ராசியின் நான்காவது வீட்டில் உருவாகும். எனவே, இந்த காலகட்டத்தில், திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். பொருள் இன்பம் அதிகரிக்கும். அதே நேரத்தில், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். சொத்துக்களால் லாபம் ஈட்டலாம். தாயுடனான உறவு வலுவடையும்.

கும்பம்: மாளவ்ய மற்றும் கஜகேசரி ராஜயோகத்தின் உருவாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உங்கள் ராசியிலிருந்து நான்காவது இடத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாகும். அதேசமயம் உங்கள் ராசியின் செல்வ ஸ்தானத்தில் மாளவ்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் வாகனம் வாங்கலாம். மேலும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

தங்கம் வாங்க உகந்த நேரம்:
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க உகந்த நேரம் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 05:41 மணி முதல் பிற்பகல் 02:12 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் தங்கம் வாங்கலாம். இதனுடன், ஏப்ரல் 29 ஆம் தேதி மாலையிலும் தங்கம் வாங்கலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இந்த 5 ராசிகளை கொண்ட பெண்கள் கணவர்களுக்கு அதிக அதிர்ஷ்டத்தை கொடுப்பார்கள்!

மேலும் படிக்க | மர்மமான குணாதிசயம் கொண்ட 4 ராசிகள்! இவங்களை யாராலும் புரிஞ்சிக்கவே முடியாது..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News