)
Trigrahi Yog: தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சிறப்பு முக்கியம் வாய்ந்தது. ஏனெனில் இந்த சுப நாளில் பல யோகங்கள் உருவாகப் போகிறது. முக்கியமாக மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், புத்திகாரகனான புதன் மற்றும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஆகிய 3 கிரகங்களும் வரும் தீபாவளி பாண்டிகையில் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த திரிகிரக யோகத்தை உருவாக்கப் போகின்றனர். இந்த யோகம் துலாம் ராசியில் உருவாகப் போகிறது. மேலும் தீபாவளி அன்று இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தென்படும். எனினும் மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு யோகத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் காணலாம். அதுமட்டுமின்றி இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு வெளிநாடு யோகமும் கிடைக்கலாம். எனவே திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிக்காரர்கள் எவை என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
துலாம்: துலாம் ராசியின் முதல் வீட்டில், சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களின் அரிய சேர்க்கையால் சக்திவாய்ந்த திரிகிரக யோகம் உதயமாகிறது. இந்த யோகம் துலாம் ராசிக்காரர்களுக்குப் பல வழிகளில் சிறப்பான பலன்களை அள்ளித் தரும். இந்த கிரகங்களின் சேர்க்கை உங்கள் ஆளுமையை பலப்படுத்தும், இதனால் உங்கள் தன்னம்பிக்கை உயரும். சமுதாயத்தில் உங்களுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயரும். புதிய பொறுப்புகளும் கௌரவங்களும் தேடி வரலாம். பணியிடத்தில் உங்கள் திறமை, உழைப்பு மற்றும் படைப்பாற்றல் பாராட்டப்பட்டு அதற்கான அங்கீகாரமும் வெகுமதியும் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்குரிய முழு பலனையும் அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அல்லது தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு, நல்ல பொருத்தமான வாழ்க்கைத் துணை அமைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த யோகத்தின் தாக்கத்தால், உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழில் அல்லது வேலை ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் கூடும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
தனுசு: தனுசு ராசிக்கு 11வது வீட்டில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை மூலம் ஒரு சக்திவாய்ந்த திரிகிரக யோகம் உண்டாகிறது. இது தனுசு ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வச் செழிப்பையும், வருமான உயர்வையும் அளிக்கும் ஒரு அரிய அமைப்பாகும். லாப ஸ்தானத்தில் உருவாகும் இந்த யோகத்தால், உங்களின் வருமானம் மிகச் சிறப்பாக உயரும். எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு மூலம் வருமானம் கூடும். தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் சிறப்பான லாபத்தை ஈட்டுவார்கள். பெரிய நிறுவனங்களிடமிருந்து புதிய மற்றும் லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். கூட்டாளிகள் மூலம் அதிக நன்மையும், வெற்றியும் கிடைக்கும். நீங்கள் செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் பெறுவீர்கள். பங்குச் சந்தை அல்லது லாட்டரி போன்ற ஊக வணிகங்கள் மூலமாகவும் எதிர்பாராத அளவில் திடீர் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த திரிகிரக யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமையை பலப்படுத்தி, வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களையும் வெற்றியையும் பெற்றுத் தரும் ஒரு பொற்காலமாக அமையும்.
மகரம்: மகர ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது. இந்த மும்மூர்த்தி சேர்க்கை (திரிகிரக யோகம்) மகர ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி மற்றும் வெற்றிகளை அள்ளித் தரவிருக்கிறது. இதுவரை நீங்கள் சிந்திய வியர்வைக்கும், உழைத்த உழைப்புக்கும் தற்போது முழுமையான மற்றும் திருப்திகரமான பலன் கிடைக்கும். உங்கள் திறமை வெளிச்சத்துக்கு வரும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, பாராட்டுகள் அல்லது எதிர்பாராத வெற்றிகள் கிட்டும். மொத்தத்தில், தொழில் ரீதியாக ஒரு திருப்புமுனையான காலகட்டம் இது. வேலையில் மாற்றம் அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் தொழிலில் புதிய உத்வேகத்தை அளிக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிவடையும். ஒரு முடிவை நோக்கி நகராத விஷயங்கள் இப்போது வேகமெடுக்கும். உங்கள் தந்தையுடனான உறவு பலமடையும். தந்தையின் ஆதரவு அல்லது ஆலோசனைகள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இந்தக் காலகட்டம், உங்கள் தொழில் மற்றும் கௌரவத்தை பன்மடங்கு உயர்த்தும் ஒரு பொற்காலம் என்பதில் சந்தேகமில்லை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ