)
Conjunction Of Budhan And Guru 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நட்பு மற்றும் எதிரி கிரகங்களுடன் சேர்க்கை பெரும். அதன் தாக்கம் 12 ராசிகளிலும் தெரிய வரும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் புதனும் குருவும் சேர்க்கை பெறப் போகிறது. இந்த சேர்க்கை சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். மேலும், இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றியைப் பெறுவார்கள். இந்த ராசி மக்கள் சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். இந்நிலையில் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
சிம்மம் (Leo Zodiac Sign): புதன் மற்றும் குருவின் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் இந்த சேர்க்கை உங்கள் ராசியின் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், வேலையில் பதவி உயர்வு பேரளம். மேலும் உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய பொறுப்புகளை பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் ஏற்படும், நிதி நிலை மேம்படும். இந்த நேரத்தில், முதலீடு மூலம் மிகப்பெரிய லாபம் ஈட்டலாம். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குருவின் சேர்க்கை மங்களகரமான பலனைத் தரும். ஏனெனில் இந்த சேர்க்கை கன்னி ராசியின் கர்ம ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே, இந்த நேரத்தில், உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். மேலும், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வாழ்க்கையில் ஆடம்பரங்களும் வசதிகளும் அதிகரிக்கும், பணியிடத்தில் மரியாதை மற்றும் பதவி உயர்வும் பெறலாம். மேலும், இந்த நேரத்தில் வணிகர்களுக்கு நல்ல நிதி லாபம் உண்டாகும். உங்கள் தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் புதனின் சேர்க்கை நன்மை தரும். ஏனென்றால் இந்த தற்செயல் நிகழ்வு மீன் ராசியின் சொத்து மற்றும் மகிழ்ச்சி வீட்டில் உருவாகப் போகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் ஆடம்பரங்களும் வசதிகளும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். உங்கள் மாமியார் வீட்டுடனான உறவு வலுவடையும். புதிய வேலைகளைத் தொடங்கலாம். சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட், சொத்து, நிலம் மூலம் நன்மைகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ