Jupiter Hansa Mahapurusha Rajyoga: 2026 ஆம் ஆண்டில், பல சிறிய மற்றும் பெரிய கிரகங்கள் பெயர்ச்சியடை உள்ளது. இந்த பெயர்ச்சியால் நல்ல மற்றும் மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகப் போகிறது, இந்த சிறப்பு யோகங்கள் மனித வாழ்க்கையிலும் உலகிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் ஜூன் மாதத்தில், குரு அதன் உச்ச ராசியான கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இந்த பெயர்ச்கியால் மிகவும் சக்திவாய்ந்த ஹன்ஸ மஹாபுருஷ ராஜயோகம் உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராஜயோகத்தால் சில ராசிகளின் அதிர்ஷ்டம் பல மடங்கு பிரகாசமாக்கக்கூடும். இந்த ராசிக்காரர்கள் பதவி உயர்வையும் கௌரவத்தையும் அடையலாம். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதைப பார்ப்போம்…
கன்னி (Virgo Zodiac Sign): குருவால் ஹன்ஸ மஹாபுருஷ ராஜயோகம் உருவாகப் போவதால் வருமான ரீதியாக கன்னி ராசிகாரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கலாம். குரு உங்கள் ராசியிலிருந்து 11வது வீட்டில் பெயர்ச்சி அடைவதால், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். புதிய வழிகள் மூலமாகவும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். பங்குச் சந்தை, ஊகம் மற்றும் லாட்டரி மூலம் நீங்கள் லாபம் ஈட்டலாம். உங்கள் புகழும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும். உங்கள் தொழில் புதிய உயரங்களை எட்டும். தொழிலதிபர்கள் ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தை இறுதி செய்து முடிக்கலாம். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளையும் நீங்கள் பெறலாம்.
துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ மஹாபுருஷ ராஜயோகம் உருவாகப் போவதால், அதீத பலன் கிடைக்கும். ஏனெனில் இந்த ராஜயோகம் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் கர்ம வீட்டில் உருவாகப போகிறதுக்கு. எனவே, இந்த நேரத்தில், உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் தங்கள் பணிக்காக பாராட்டுகள் கிடைக்கக்கூடும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் மூத்தவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் எதிர்காலத் திட்டங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் வலுவாகவும் தோன்றும். சமூக ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். இந்த நேரத்தில் தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களை அடையலாம். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கும் இதுவே சரியான நேரம்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): குருவால் உருவாகப் போகும் ஹன்ஸ மஹாபுருஷ விருச்சிக ராசிகாரர்களுக்கு நல்ல இஷ்ட பலனைத் தரும். இந்த ராஜயோகம் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாவது வீட்டில் உருவாகப் போகிறது. குருவின் நிலை இங்கு மிகவும் வலுவாகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தை உங்கள் பக்கத்தில் காண்பீர்கள். நீங்கள் சில மத அல்லது நல்ல நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம். இந்த காலம் ஆன்மீக மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சாதகமான பலனைத் தரும். படைப்பு நடவடிக்கைகள் மற்றும் கலை முயற்சிகளிலும் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். இந்த நேரத்தில் பயணம் அல்லது புதிய தொடர்புகள் புதிய சாத்தியங்களைத் திறக்கும். உங்கள் படைப்பாற்றல் முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் படைப்பாற்றல் மூலம் உங்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவீர்கள். நீங்கள் மனரீதியாக நிலையாக உணருவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









