சூரிய கிரகணம் 2023: இந்து மதத்தில், சூரிய கிரகணத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். இந்த முறை இந்த ஆண்டின் முதல் கிரகணம் 20 ஏப்ரல் 2023 அன்று (காலை 7.4 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை நீடிக்கும்) நிகழ இருக்கிறது. சூரிய பகவான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகக்கூடிய நாள் ஏப்ரல் 14ம் தேதி. தொடர்ந்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளனர். அங்கு கேது பகவான் சஞ்சரிப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் அதிகபட்ச விளைவு மேஷ ராசிக்காரர்களிடம் காணப்படும். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை சந்திக்கப்போகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி
ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமற்றதாக இருக்கும். இதனால் உடல் நலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தில், மன சிக்கல்கள் அதிகரிக்கும். நிதி விஷயங்களிலும் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். இதன் போது, ​​எது தவறு, எது சரி என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இந்த நேரத்தில் எது சரி, எது தவறு என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து செல்வது நல்லது. 


மேலும் படிக்க | ராகுவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்


ரிஷப ராசி
சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். இதன் போது பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இந்தக் காலத்தில் உங்களின் கோபம் அதிகரிக்கும்.  திடீர் செலவுகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் செலவால் சேமிப்பு கரையும்.


கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் ஆரோக்கிய பாதிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் மன கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


துலாம் ராசி
இந்த ராசிக்காரர்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் முதலீடு எதிர்பார்த்த பலனைத் தராது. தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்படும். உத்தியோகத்தில் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இன்று அதிஷ்டம் பெரும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ