Akshaya Tritiya Rajayogam On April 19th: ஏப்ரல் 10ஆம் தேதி அட்சய திருதியை நாளில் 7 ராஜயோகங்கள் உருவாகிறது. இது குறிபிட்ட ராசிகளுக்கு செல்வம், தங்கத்தை வாரி வழங்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.

Akshaya Tritiya Rajayogam On April 19th: நடப்பாண்டிற்கான அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வளர்பிறையின் மூன்றவாது நாள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை இந்துங்களால் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் ஒவ்வொரு விஷயங்களும் நல்ல பலன்களை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
குறிப்பாக, அட்சய திருதியை நாளில் ஒரு பொட்டு தங்கத்தையாவது நம் மக்கள் வாங்குவார்க்ள. அட்சய திருதியை அன்று தங்கத்தை வாங்குவது செல்வத்தை அதிகரிக்கும் என நம்ப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 18ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது.
இந்த நாளில் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, அட்சய திருதியை நாளான ஏப்ரல் 19ஆம் தேதி 7 ராஜயோகங்கள் உருவாகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி ரவி யோகம், கஜகேசரி யோகம், திரிபுஷ்கர யோகம், சர்வார்த்த சித்தி யோகம், சச யோகம், மாளவ்ய யோகம், லட்சுமி நாராயண யோகம், அட்சய யோகம் ஆகிய யோகங்கள் அட்சய திருதியை நாளில் உருவாகிறது. இந்த யோகங்கள் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
ஜோதிட ரீதியாக சூரியன் மற்றும் சந்திரனின் நட்சத்திர நிலைகளால் ரவி யோகம் உருவாகிறது. ஏப்ரல் 19ஆம் குரு மற்றும் சந்திரன் பகவான் ஒன்றிணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கிறது. திரிபுஷ்கர யோகத்தை பொறுத்தவரை, கிருத்திகை, புனர்புசம், உத்திரட்டாதி, பூரட்டாதி நட்சத்திரங்கள் இணையும் போது, இந்த யோகம் உருவாகிறது. மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி சூரியன் அதன் உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும் இருக்கும். இதனால், அன்றைய தினம் அட்சய யோகம் உருவாகிறது. தொடர்ந்து, சர்வார்த்த சித்தி யோகம், சச யோகம், மாளவ்ய யோகம், லட்சுமி நாராயண யோகம் என ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் மங்களகரமான யோகங்கள் உருவாகிறது. இதனால், 4 ராசிகளுக்கு குறிப்பிட்ட லாபத்தை அள்ளி தருகிறது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
அட்சய திருதியை நாளில் உருவாகும் மங்களகரமான ராஜயோகங்களால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். மேலும், நிதி நிலைமை மேம்படும். உங்களுக்கு இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் தீரும். ஏப்ரல் 19ஆம் தேதி தங்கம் வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கிறது. 7 யோகங்கள் மேஷ ராசிக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் மூலம் அதிகமான லாபத்தை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். மேலும், உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வார்கள்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். மேலும் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானமும் உயரக் கூடும். ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். அதிர்ஷ்டம், தங்கம் பெருகும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மேலும், உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக அனைத்து விஷயங்களும் நடக்கும்.
அட்சய திருதியை நாளில் சிம்ம ராசிக்காரர்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும். மேலும், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் அனைத்து விஷயத்திலும் இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏறற வெற்றிகளை பெறுவீர்கள். திருமணமாகதவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையக் கூடும். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். மேலும், உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருணத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. உங்களுக்கு காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். குழந்தை வரன் வேண்டி இருப்பவர்கள் விரைவில் நல்ல செய்தியை பெறுவார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் உருவாகும் ராஜயோகங்களில் அற்புதமான பலன்களை பெறுவார்கள். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் மனப்பிரச்னைகள் முடிவு கிடைக்கும். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். உடன் பிறந்தவர்கள் நீதி ரீதியாக உதவி செய்வார்கள். மேலும், வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பங்குச்சந்தை போன்ற முதலீடுகளில் இருந்து அதிகமான லாபத்தை பெறுவீர்கள். எதிர்பாராத நேரத்தில் செல்வம் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த வந்த பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ