Akshya Tritiya Lucky Zodiac Signs: அட்சய திருதி நாளில் தங்கம் வாங்குவது என்பது மக்களிடையே பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்த தினத்தில் தங்கம் வாங்குவது செல்வ செழிப்பை பெருக்கும் நம்பப்படுகிறது. இதனால், அந்த தினத்தில் ஒரு பொட்டு தங்கமாவது மக்கள் வாங்குவார்கள். அந்த வகையில், இந்தாண்டில் ஏப்ரல் 19ஆம் தேதி அட்சய திருதி வருகிறது.
அட்சய யோகம்
அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி காலை 10.49 மணி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி 5.51 மணி வரை நீடிக்கிறது. இப்படிப்பட்ட நாள் ஏற்கனவே மங்களகரமாக இருக்கும் நிலையில், மேலும் கூடுதலாக இந்த நாளை கிரகங்கள் சிறப்பாக்குகிறது. அதாவது, அட்சய திருதியை நாளில் மங்களகரமான யோகம் உருவாகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி சூரியன் அதன் உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும் இருக்கும். இதனால், அட்சய யோகம் உருவாகிறது. அட்சய யோகம் மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை நாளில் அட்சய யோகம் உருவாகுவது குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
மேஷம் (Aries)
அட்சய திருதியை நாளில் அட்சய யோகம் உருவாகுவது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களை அள்ளிக் கொடுக்கிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் தங்கும் வாங்குவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. உங்களுக்கு இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். புதிய தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்சய யோகத்தால் நல்ல பலன்களை பெறுவார்கள். உங்களின் நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான வழிகள் பிறக்கும். நீங்கள் சொத்து, வீடு, நகை வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கிறது. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் நினைத்த விஷயங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நீண்ட காலமகா கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதிய வருமான வழிகள் திறக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்னை சரியாகும்.
சிம்மம் (Leo)
அட்சய யோகம் நாளில் சிம்ம ராசிக்காரர்கள் மங்களகரமானதாக இருக்கும். இந்தகாலக்கட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புள் இருக்கிறத. தொழிலதிபர்கள் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள். இதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்தும் லாபத்தை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்துடன் சென்று அட்சய திருதியை நாளில் நகை வாங்கி குவிப்பீர்கள்.
விருச்சிகம் (Scorpio)
அட்சய யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு திடீர் நிதி அதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நினைத்த காரியங்களை திட்டமிட்டப்படி முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க கூடும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க: கேது பெயர்ச்சி: கண்டத்தில் சிக்கும் 3 ராசிகள்.. டிசம்பர் வரை பிரச்னை!
மேலும் படிக்க: சூரியன் பெயர்ச்சி.. 4 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்! பணம் புகழ் அதிகரிக்கும்
மேலும் படிக்க: ஏப்ரல் 22 முதல் சனி எழுச்சி.. 3 ராசிகளின் அதிர்ஷ்டம் விண்ணைத் தொடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









