சனி அமாவாசை - சூரிய கிரகணத்தின் அற்புதமான கலவை, 5 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

Sani Amavasya and Solar Eclipse: ஜோதிடத்தின்படி, இந்த ஆண்டு சனி அமாவாசை அன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வால் எந்த ராசிகளுக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 21, 2025, 08:27 PM IST
  • அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
  • ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
சனி அமாவாசை - சூரிய கிரகணத்தின் அற்புதமான கலவை, 5 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

Sani Amavasyai 2025 Surya Grahanam Effect: ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற மார்ச் 29 ஆம் தேதி நிகழப் போகிறது. இந்த நாளில் சனி பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார். இப்படி அறிய நிகழ்வுகள் இந்நாளில் அரங்கேறப்போகிறது. மேலும் தற்போது நடக்கப் போகும் சூரிய கிரகணமானது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். மேலும் இந்த நிகழ்வு சனி அமாவாசை நிகழப் போகிறது. அதேபோல் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி பெயர்ச்சி அடைவார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சனி அமாவாசை அன்று ஏற்படும் சூரிய கிரகணம் எந்த 5 ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

மேஷம்
இந்த சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சுபப் பலனைத் தரும். சூரிய கிரகணத்தின் நல்ல பலன்களால், நிதி மேம்படும். பொருளாதாரம் வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இதனுடன், செலவுகள் குறையத் தொடங்கும். மாணவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஏற்படும். 

மேலும் படிக்க |  சனி பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கு சனிபகவான் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன

கடகம்
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் மற்றும் சனியின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்கள பலனைத் தரும். வேலை வணிகத்தில் நிதி முன்னேற்றம் காணப்படும். தொழிலில் நிதி மேம்படும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நீண்டகாலமாக நடைபெறும் பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

துலாம்
சூரிய கிரகணத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி முதலீடு பெரும் லாபத்தை தரும். பணியிடத்தில் பணி பாராட்டப்படும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
சூரிய கிரகணம், சனிப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான இருக்கும். தொழிலில் ஆதரவு கிடைக்கும். வேலையில் நல்ல செய்தி கிடைக்கலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உணடாகும். சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மற்றும் சனிப் பெயர்ச்சி சேர்க்கையால் மங்களகரமான பலன் கிடைக்கும். சனி பகவானின் சிறப்பு ஆசி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிதி நன்மை கிடைக்கும். மன அழுத்தம் குறையும். தம்பதி வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |  பங்குனி 6 வியாழக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News