Mars Transit & Angaraka Yogam: ஜூலை மாதத்தில் சிம்ம ராசியில் உருவாகும் அங்காரக யோகம் சில ராசிகளுக்கு சவால்களையும் சிக்கல்களையும் கொடுக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். கெடு பலன்களை சந்திக்க இருக்கும் ராசிகளையும், ராசிகளுக்கு ஏற்ற எளிய பரிகாரங்களையும், இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
சிம்மத்தில் செவ்வாய் கிரகமும் கேது கிரகமும் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம், சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் கொடுக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் ரீதியாகவும் பல இன்னல்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடலாம். ஜூலை மாதம் 28ஆம் தேதி வரை, சிம்ம ராசியில் செவ்வாயும் கேதுவும் இணைந்து இருப்பதால், சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கும். எனினும் சில எளிய பரிகாரங்கள் மூலம், கெடுபலன்களைத் தவிர்க்கலாம்.
சிம்ம ராசிக்கான பலன்களும் பரிகாரங்களும்
அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தவறாக வழி நடத்துபவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாகனங்கள் ஓட்டும் போது கவனம் தேவை. உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நிதானத்தை கடைபிடிப்பதால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிவன் கோவிலுக்கு வழக்கமாக சென்று வழிபடுவதும், பிரதோஷ வழிபாடும், சிக்கல்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்கான பலன்களும் பரிகாரங்களும்
முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னால் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களை ஆலோசித்து எடுப்பது நல்லது. நிதானத்தை இழக்காமல் பொறுமையுடன் செயல்படுவதால், உங்கள் நற்பெயர் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். யோகா மற்றும் தியான பயிற்சி விடாமல் தொடர்வது நல்லது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். எனினும் கடன் வாங்குவதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. முதலீடு செய்யும் முன் ஆலோசனை பெறவும். தினமும் அனுமன் சாலிசா பாராயணம் செய்வது, தடைகளை தகர்த்தெறிய உதவும்.
மகர ராசிக்கான பலன்களும் பரிகாரங்களும்
அங்காரக யோகம் காரணமாக நிதிநிலை பாதிக்கப்படலாம். உடல்நல பிரச்சனைகளும் அதிகரித்து மன உளைச்சலை ஏற்படுத்தலாம். எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கோபப்படுவது பிரச்சனைக்கு தீர்வை தராது. நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது எல்லோருக்கும் நல்லது. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு, சிந்தனையுடன் செயல்படுவதால், இன்னல்கள் நீங்கி இன்பம் பெறலாம். தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, கெடுபலன்களை போக்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கும்ப ராசிக்கான பலன்களும் பரிகாரங்களும்
குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளையும் சோதனைகளையும் சந்திக்க நேரிடலாம். எனினும் நம்பிக்கையுடன் இருங்கள். மனம் விட்டு பேசுவது எப்போதுமே நல்லது. பணியிடத்திலும் பொறுப்பு அதிகரிப்பதன் காரணமாக பணி சுமை அதிகரிக்கலாம். இதனால் மன அழுத்தம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படலாம். நிதி பரிவர்த்தனைகளை மிகவும் எச்சரிக்கையாக கையாள்வது நல்லது. விக்னங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு, சவால்கள் அனைத்தையும் சமாளிக்க உதவும்.
மீன ராசிக்கான பலன்களும் பரிகாரங்களும்
அங்காரக யோகம் மீன ராசிகளின் நிதி நிலையை பாதிக்கும். மோசடியில் சிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதை முடிந்த அளவு தவிர்க்க முயலவும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொறுமையாக கையாண்டால், சோதனைகளை சாதனைகளாக மாற்றலாம். துர்க்கை அம்மன் வழிபாடும், ராகு கால பூஜையும், கஷ்டங்களை போக்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | குரு உதயம்: 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம், ஜூலை 9 முதல் தொட்டதெல்லாம் வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









