ஆனி அமாவாசை 2025: ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதி அனைத்தும் சிறப்பானவை தான். அந்த வகையில் ஆஷாட அமாவாசை என்னும் ஆனி மாத அமாவாசையில் செய்யப்படும் தர்ப்பணங்களும், தானங்களும், பரிகாரங்களும் வாழ்க்கையில் இன்னல்கள் அனைத்தையும் நீக்க உதவும்.பித்ரு தோஷம் மட்டுமல்லாது, பணக்கஷ்டம், மன கஷ்டம் குடும்பப் பிரச்சனைகள், கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உள்ளிட்ட பல வகையான வாழ்க்கை பிரச்சனைகளையும் துன்பங்களையும் நீக்க ஆனி மாத அமாவாசை பரிகாரங்கள் பெரிதும் கை கொடுக்கும்.
கஷ்டங்கள் அனைத்தும் நீங்க உதவும் ஆனி அமாவாசை பரிகாரங்கள்
ஆஷாட அல்லது ஆனி மாத அமாவாசை, ஆனி மாதம் 11ஆம் தேதி, புதன்கிழமை, அதாவது ஜூன் 25ஆம் தேதி வருகிறது. தற்போது கும்பம் மீனம் மற்றும் மேஷ ராசியினர், ஏழரை நாட்டு பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தும் விலக செய்ய வேண்டிய தானங்கள், பரிகாரங்கள் மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவை குறித்து இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
துன்பங்கள் அனைத்தும் நீங்க அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவை
பித்ருக்களுக்கு உகந்த அமாவாசை தினத்தன்று, பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுப்பது, கோயில்களில் அபிஷேகம் அன்னதானம் செய்வது ஆகியவை, கஷ்டங்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். முடிந்தவர்கள் அமாவாசை நாளில், புண்ணிய தளங்களுக்கு சென்று, அங்குள்ள ஆறு குளம் கடல் ஆகியவற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்கலாம்.
தண்ணீரில் மூழ்கி குளிக்கும் போது, முன்னோர்களின் ஆசிகளைப் பெற, அவர்களை மனமார நினைவு கூர்ந்து வணங்கி, துன்பங்கள் அனைத்தையும் நீக்குமாறு பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். கடைசியாக தண்ணீருக்குள் மூழ்கி எழும்போது இரு கைகளிலும் தண்ணீரை ஏந்தி, பகவானை நோக்கி வணங்கி, தண்ணீரை விட வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
அமாவாசை என்று செய்ய வேண்டிய தானங்கள்
1. பொதுவாகவே ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுப்பதால், கர்ம வினைகள் அனைத்தும் இங்கு நல்ல காலம் பிறக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் அமாவாசை தினத்தன்று செய்யும் அன்னதானங்கள் பலன் மடங்கு பலனை கொடுக்க கூடியவை.
2. உங்களால் முடிந்தால் தேவைப்படுபவர்களுக்கு பால், அரிசி போன்ற பொருட்களையும் தானம் செய்யலாம். இதனால் பித்ருக்களின் கோபம் நீங்கி அவர்களது ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைத்து, குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
3. அமாவாசை அன்று செய்யப்படும் வெண்ணெய் அல்லது நெய் தானம், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் போக்கி, நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
4. கருப்பு நிற எல்லை தானமாக கொடுப்பதும், கருப்பு நிற பறவை விலங்குகள் அதாவது, காகம், கருப்பு நிற நாய் ஆகியவற்றிற்கு உணவளிப்பது, நல்ல பலனை கொடுக்கும். பசுவிற்கு தீவனம் அளிப்பதும், துன்பத்தைப் போக்கும்.
5. ஆடைகள் தானம் செய்வதும் பித்ருக்களை மகிழ்விக்கும். தேவைப்படுபவர்களுக்கு ஆடைகள், குடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். இதனால் உடலை வாட்டி வரும் நோய் நொடிகள் தீர்ந்து நிம்மதியான வாழ்வை பெறலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ