ஏப்ரல் 2025: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப்போகுது!

ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடமான மாதமாக உள்ளது. அதில் குறிப்பாக இரண்டு ராசிக்காரர்கள் பற்றி பார்க்கலாம். 

Written by - R Balaji | Last Updated : Mar 31, 2025, 08:31 PM IST
  • ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும்
  • லட்சுமி தேவியின் அருளால் அவருக்கு பண வரவு இருக்கும்
ஏப்ரல் 2025: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப்போகுது!

வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை வழிபடப்படுகிறார். இது மட்டுமல்லாமல், லட்சுமி வரதமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை கடைபிடிப்பதன் மூலம் நிதி தொடர்பான சிக்கல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், லட்சுமி தேவியின் அருளால், இரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

இந்த மாதத்தில் சூர்ய பகவானும், செவ்வாயும் தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்வார்கள். இவர்களின் மாற்றத்தால், அனைத்து ராசிகளுக்கும் குறிப்பிட்ட தாக்கங்கள் ஏற்படும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில், ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக உள்ளது. 

மேலும் படிங்க: குரு நட்சத்திர பெயர்ச்சி: பொற்காலம், வெற்றி மேல் வெற்றி இந்த ராசிகளுக்கு

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் சிறந்ததாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால், நிதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதேபோல் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் எதிர்கள் உங்களை பார்த்து பயப்படுவார்கள். 

நீங்கள் நிலம் அல்லது கட்டிடம் வாங்கலாம். அதேபோல் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. நன்பர்களிடம் இருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். மேலும், வெள்ளிக்கிழமையின் போது, லட்சுமி தேவிக்கு அரிசி மற்றும் வெல்லம் கலந்த கீரையை நைவேத்யம் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் விரும்பங்கள் நிறைவேறும். 

துலாம்

ஏப்ரல் மாதத்தில், துலாம் ராசிக்காரர்களிடம் லட்சுமி தேவி கருணை காட்டுவார். லட்சுமி தேவியின் அருளால், தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தடைபட்ட தொழில் மீண்டும் இயங்க வாய்ப்புள்ளது. அதேபோல் நீங்கள் பழைய நண்பரை சந்திக்க வேண்டி இருக்கும். அவர்கள் மூலம் உங்களுக்கு புதிய வணிக யோசனை வரலாம். 

செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் காலப்போக்கில் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்றம் ஏற்படும்.அருளால் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய விடியல் பிறக்கும். முதலீட்டிற்கு நல்ல வாய்ப்பு ஏற்படும். ஏப்ரல் மாதத்தில் நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜையின் போது லட்சுமி தேவிக்கு தேங்காய் நைவேத்யம் செய்யுங்கள். இதன் மூலம் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது.  

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிங்க: குரு பெயர்ச்சி 2025: மிகப்பெரிய ராஜயோகம், அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசிகள் இவையே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News