Ketu Peyarchi Palangal: ஜோதிடத்தின்படி, ஒன்பது கிரகங்கள் தொடர்ச்சியாக தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்கின்றன. கிரக நிலைகள் மாறும்போது, அனைத்துத் ராசிகளின் வாழ்விலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், 2026ல் கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடகம் ராசிக்கு இடமாற்றம் செய்ய உள்ளார். ஜோதிடத்தில் கேது நிழல் கிரகமாக காணப்படுகின்றது. கேது பகவான் ‘மோட்ச காரகன்’ என்ற பாணியில் அழைக்கப்படுகிறார். அவர் ஆன்மீகம், துறவு போன்ற எதிர்பாராத மாற்றங்களுடன் தொடர்புடையவர்.
3 Lucky Zodiac Signs: கேது பகவான் ஒரு ராசியில் 3, 6 மற்றும் 11-ம் வீடுகளில் பயணம் செய்யும்போது சிறப்பான நன்மைகளை வழங்குவார். அந்த வகையில், 2026ல் கேது பெயர்ச்சியால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிக அளவிலான பலன்களை பெற இருக்கின்றன்ர். அந்த ராசிகள் இங்கே.
கடகம் (Cancer)
2026ம் ஆண்டில் கேது கடகம் ராசியின் 3வது வீடு, தைரிய வீட்டைச் சுற்றி நகர்வார். இதனால் கடகம் ராசிக்காரர்கள் வெற்றி, தொழிலில் முன்னேற்றம் போன்ற நன்மைகள் பெறுவார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி புதிய வாய்ப்புகளையும் பெற இருக்கின்றனர். எதிர்பாராத வருமானம் அதிகரித்து, சகோதரர்களின் அனுகூலமும் கிடைக்கும்.
துலாம் (Libra)
துலாம் ராசிக்கான கேது பயணம் 11வது வீடான லாப வீட்டில் நடக்கும். இதனால் தொழில் மற்றும் வேலையில் மகத்தான முன்னேற்றம், சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. வேலை இல்லாமல் இருப்பவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். திருமணம் தொடர்பான நல்ல செய்திகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கி இருப்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
கும்பம் (Aquarius)
கும்பம் ராசியின் 7வது வீட்டில் கேது நகர்வதால், வேலையை மாற்ற விருப்பமுள்ளவர்களுக்கு விருப்பமான பணிகள் கிடைக்கும். அதேபோல் புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியடையும். வணிகர் மற்றும் தொழிலதிபர்களுக்கு அதிக லாபம் ஏற்படும். புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களின் உதவி கிடைக்ககூடும். ஆன்மீக வளர்ச்சியும் ஊக்கமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க: டிசம்பரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. யாரெல்லாம் தெரியுமா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









