துலாம் ராசியில் இந்த ஆண்டு நவம்பரில் புதன் மற்றும் சுக்கிரன் என்ற இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் இணையும் போது, சுப யோகம் உருவாகப் போகிறது. இதனால், குறிப்பிட்ட, 3 ராசிக்காரர்கள் ராஜயோக பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துலா ராசியில் இணையும் புதன் மற்றும் சுக்கிரன்: ஜோதிடத்தில், புதன் புத்திசாலித்தனம், பேச்சாற்றல் மற்றும் அறிவாற்றலிய வழங்கும் காரகர் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், சுக்கிரன் செல்வம் மற்றும் மகிமைக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். ஜோதிடத்தின் படி, இந்த இரண்டு கிரகங்களும் இணைவதால் உருவாகம் யோகம் மூலம், 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பரவி, அவர்களின் தடைபட்ட வேலைகள் நிறைவடையத் தொடங்குகின்றன.
ராஜயோக பலன்களை பெறும் அதிர்ஷ்ட ராசிகள்
துலா ராசியில் இந்த ஆண்டு நவம்பரில் புதன் மற்றும் சுக்கிரன் என்ற இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் இணையும் போது, சுப யோகம் உருவாகப் போகிறது. இதனால், குறிப்பிட்ட, 3 ராசிக்காரர்கள் ராஜயோக பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும் அதிர்ஷ்டத்தை தடையில்லாமல் பெறலாம். வாழ்க்கையில் சந்தித்து வரும் தடையும் நீங்கும். அந்த 3 ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்
புதன்-சுக்கிரன் இணைவினால் கிடைக்கும் பலன்கள்
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு, புதன்-சுக்கிரன் இணைவு சாதகமாக இருக்கலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மறுபுறம், தங்கள் வேலையை மாற்ற நினைப்பவர்கள் ஒரு நல்ல நிறுவனத்திடமிருந்து வேலிய வாய்ப்பை பெறலாம். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கக்கூடும். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். இது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
கன்னி ராசி
புதன்-சுக்கிரன் என்ற இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் இணைவதால், வெற்றிக்கான கதவுகள் உங்களுக்காக திறக்கத் தொடங்கும். மக்கள் உங்கள் பேச்சால் ஈர்க்கப்படுவார்கள். பணியிடத்தில், முதலாளி உங்கள் திறமையை பார்த்து மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். எதிர்பாராத வகையில் பண வரவு கிடைக்கும். பழைய முதலீட்டிலிருந்து நல்ல வருமானத்தைப் பெறலாம். மக்கள் உங்கள் பேச்சுத் திறனால் ஈர்க்கப்படுவார்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
துலாம் ராசி
புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். உங்கள் ஆளுமை திறன் மேம்படும். மேலதிகாரிகளின் பாராட்டை பெற்று பணியிடத்தில் சிறப்பான அங்கீகாரத்தை பெறுவீர்கள். தொழிலதிபர்கள் பல நல்ல ஒப்பந்தங்களைப் பெறலாம். உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் வெற்றிச் செய்திகளைப் பெறலாம்.உங்கள் ஆசைகள் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், வாஸ்து சாஸ்திரங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ