நவராத்திரியில் புதனின் பெரிய மாற்றம்: பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்
Mercury Transit: நவராத்திரியில் புதன் கிரகத்தின் நிலை மாற்றம் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இவர்களுக்கு உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், பணவரவும் கூடும்.
புதன் கிரகத்தின் மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: புத்திசாலித்தனம், செல்வம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் கிரகம் தற்போது கன்னி ராசியில் வக்ர நிலையில், அதாவது தலைகீழ் நகர்வில் உள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி, புதன் கன்னி ராசியிலேயே வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்தை துவங்கும். இதைத் தொடர்ந்து அக்டோபர் 3 ஆம் தேதி மகா அஷ்டமியும், அக்டோபர் 4 ஆம் தேதி மகா நவமியும், அக்டோபர் 5 ஆம் தேதி விஜய தசமியும் வருகின்றன. நவராத்திரியில் புதன் கிரகத்தின் நிலை மாற்றம் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இவர்களுக்கு உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், பணவரவும் கூடும். புதன் எந்தெந்த ராசிகளுக்கு சுப பலன்களை அளிப்பார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் இயக்கம் பல நன்மைகளை அள்ளித் தரும். இவர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும்.
ரிஷபம்:
கன்னி ராசியில் புதனின் நேர் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக அமையும். திடீர் பண ஆதாயத்தைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் பெற எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் புதனின் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் பல புதிய சாதனைகளை செய்யக்கூடும். மரியாதை அதிகரிக்கும். பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
புதனின் நேர் இயக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிக்கி இருந்த தொகையை கிடைக்கச் செய்யும். வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் பல இன்னல்களிலிருந்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு புதனின் இயக்கம் பெரிய பலன்களைத் தரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு விற்பனையும் அதிகரிக்கும், லாபமும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கும் இந்த நேரம் பலன்களைத் தரும். அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தீபாவளியில் மாறும் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி சூப்பர் நெரம், அமோக ராஜயோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ