)
Baba Vanga Zodiac Sings Predictions 2025 : பல்கேரியாவை சேர்ந்த கணிப்பாளர், பாபா வாங்கா. இவர் கணித்துள்ள பல விஷயங்கள் இதுவரை உண்மையாகி இருக்கின்றன. தீர்க்கதரிசியாக பார்க்கப்படும் இவருக்கு, கண் பார்வை கிடையாது. சிறு வயதிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்ட பிறகு, அவர் எதிர்காலத்தை பார்க்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
1996ஆம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்திருந்தாலும், உயிரிழக்கும் முன்னரே இவர் 21ஆம் நூற்றாண்டை தாண்டி, 22 மற்றும் 23ஆம் நூற்றாண்டுகளில் நடக்க இருக்கும் விஷயங்களை கூட கணித்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் கடைசி 4 ஆண்டுகள் சில ராசிகளுக்கு மட்டும் சிறப்பானதாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார். அந்த நான்கு ராசிகள் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்களான செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நன்றாக அமையும் என்று பாபா வாங்கா கணித்திருக்கிறார். அந்த ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கும் என்றும், பல்வேறு வரவுகள் வந்து நிதி நிலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில், இவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் வலுவாக உள்ளதாம். இவர்களுக்கு முன்பை விட நிதி நிலையும் சிறப்பாக இருக்குமாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு, இந்த 2025ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்கள் சிறப்பாக இருக்கும் என்று பாபா வாங்கா கணித்திருக்கிறார். இந்த ராசிக்காரர்கள், தங்களின் ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள் என்றும், தங்கள் வாழ்க்கையில் இந்த 4 மாதத்தில் முன்னேற்றம் அடைவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இவர்களுக்கு காதல் வாழ்க்கையும் நன்றாக அமையுமாம். தொடங்கும் சில வேலைகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு, 2025ஆம் ஆண்டின் தொடக்கமானது, துன்பம் தரும் ஆண்டாக இருந்திருக்கலாம். ஆனால், வரும் காலங்களில் இவர்களின் வாழ்க்கை பெரும் மாற்றத்தை காணும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். நிதி நிலை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கு முன் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அதிலிருந்து விடுபடுவீர்கள் என்றும் கணித்துள்லார். அதே போல, சுயமாக தொழில் செய்து வியாபாரம் பார்ப்பவர்களும் அதிக லாபம் ஈட்டுவார்கள் என்று பாபா வாங்காவின் கணிப்பு சொல்கிறது.
சிம்மம்:
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள், 2025ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள் நன்றாக பணம் சம்பாதிப்ப்பார்களாம். பயணத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டு, அவர்கள் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் திடீரென்று லாபமும் கிடைக்கலாம். செய்யும் வேலையினால் கிடைக்கும் அங்கீகாரம், அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுக்கும். பொருளாதார நிலைமை, முன்பை விட வலுவானதாக மாறலாம்.
பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான கணிப்பு:
பாபா வாங்கா, 2025ல் அதிக உலகில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என்று கணித்திருந்தார். அதன்படி, இஸ்ரேல்-காசா இடையே கடும் போர் சூழல் உருவாகி, அப்பாவி மக்கள் பசியால் மடிந்து வருகின்றனர். அதே போல, இந்த ஆண்டில் ஏலியன்கள் நம் உலகிற்கு வருவார்கள் என்று கணித்துள்ளார். இந்த கணிப்பு உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ