பத்ர ராஜயோக பலன்கள்: புதன் கிரகம் ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல், ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை மிதுன ராசியில் சஞ்சரிப்பார். புதன் கிரக அதிபதியாக உள்ள மிதுன ராசி பெயர்சியால் பத்ர ராஜயோகம் உருவாகிறது.

நவக்கிரகங்களில் ஞான காரகன் என்று அழைக்கப்படும் புதன், ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெயர்ச்சியாகிறார். கிரகங்கள் அனைத்துமே ஒரு சீரான இடைவெளியில், தனது ஆசை மாற்றிக் கொள்ளும் நிலையில், புதன் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுனத்திற்கு அதிபதி புதன். கிரகங்கள் தான் அதிபதியாக உள்ள ராசிக்கு செல்வது பத்ரராஜ யோகத்தை உருவாக்கும். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களைப் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
2025 ஜூன் மாத புதன் பெயர்ச்சி பலன்கள் (Mercury Transit Effects)
புதன் கிரகம் ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல், ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை மிதுன ராசியில் சஞ்சரிப்பார். புதன் கிரக அதிபதியாக உள்ள மிதுன ராசி பெயர்சியால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. அதோடு மிதுனத்தில் குரு பகவான் புதனும் இணைவதாலும் சில நாசிகள் சாதகமான பலன்களை பெறுவார்கள். இந்நிலையில் பத்திர ராஜ யோகத்தினால் சுப பலன்களைபெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Leo Zodiac SIgn)
பத்ரராஜ யோக பலன்கள் காரணமாக நிதிநிலை சிறப்பாக இருக்கும். வருமான ஆதாரங்கள் பெருகி, பொருளாதார நிலை வலுவடைய உதவும். திடீர் நிதி லாபங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரும்.
கன்னி ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Virgo Zodiac SIgn)
பத்ர ராஜயோகம் காரணமாக, வேலையில் தொழில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இதனை பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயரலாம். முக்கிய ஒப்பந்தங்கள் மூலம், நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வேலையில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும்.
கும்ப ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Aquaris Zodiac SIgn)
பத்ரராஜ யோகத்தினால், சிந்தனையில் தெளிவு உண்டாகும். இதனால் உங்கள் அணுகுமுறை மேம்பட்டு, நீங்கள் கை வைத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். உங்கள் முடிவுகள் மூலம், வருங்காலத்தில் இன்னும் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, உங்களை அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
மீன ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Pisces Zodiac SIgn)
பத்ர ராஜயோகம் காரணமாக தடைபட்ட பணிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் உங்கள் கனவை நிறைவேற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்களின் ஆசியுடன், நல் வாழ்வை பெற்று உயர வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஆன்மீக யாத்திரை செல்ல திட்டமிடலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ