Kadagam Rasi | கடக ராசிக்கு மாபெரும் ஜாக்பாட்.. பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள்! கொட்டும் பணமழை..

Kadagam Rasi News In Tamil: உங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. இந்த வளர்ச்சியை பார்க்கும் போது மற்றவர்கள் பார்வை உங்கள் மேல் விழும். அதனால் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்கக்கூடிய நிலைமைகள் ஏற்படும். எச்சரிக்கையுடன் இருங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 17, 2025, 03:32 PM IST
Kadagam Rasi | கடக ராசிக்கு மாபெரும் ஜாக்பாட்.. பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள்! கொட்டும் பணமழை..

Jackpot For Cancer Zodiac: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த கடக ராசிகாரர்களுக்கு இனி நல்ல காலம் அமையவுள்ளது. அதாவது அதிஷ்டமச் சனி முடிந்து சனி பகவானின் பெயர்ச்சியினுடைய சனி பெயர்ச்சி இனி உங்களுக்கு கிடைக்கும். இதன் காரணமாக சனி பகவானால் மாபெரும் மாற்றங்களை கடக ராசிக்காரர்கள் சந்திக்க போகிறார்கள். 

Add Zee News as a Preferred Source

சுக்கிரன்-சனி-ராகு என அருமையான அமைப்பில் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் பரிமாற்றம் அடைந்த சுக்கிரனுடன் ராகுவுடன் சேர்ந்து அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அருமையான இடத்தில் தான் சனி இருக்கிறார். இதன் காரணமாக உங்களுடைய ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனா அல்லது தேய்ப்பிறை சந்திரனா என பார்க்கும் போது, அது தேய்ப்பிறை சந்திரனாக இருந்தால் பலம் மேலும் அதிகரிக்கும். 

இந்த ராகு கேது பெயர்ச்சி அடுத்தது வருகிறது. மேலும் அதில் குரு பெயர்ச்சியும் உண்டாகப்போகுது. இந்த பெயர்ச்சி 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதி ஆகக்கூடிய பெயற்சி மீண்டும் 2027 ஆறாவது மாதம் மூன்றாம் தேதி வரைக்குமே இந்த கால அமைவுகள் இருக்கப்போகிறது. எனவே இந்த இரண்டு வருஷம் உங்க வாழ்க்கையில் கிடைத்த ஒரு பாக்கியம் என எண்ணி நீங்கள் செயல்படலாம். ஏனென்றால் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு உண்டான பலன் மிகப்பெரிய அளவில் கிடைக்கும். 

கடக ராசிகாரர்கள் நிறைய அவமானங்களை கடந்து வருகிறீர்கள். உங்க நிலை எதிரிக்கு கூட வரக்கூடாது என்ற அளவுக்கு பாதிப்புகளை சந்தித்து இருக்கிறீர்கள். மன உளைச்சலுக்கு ஆளானீர்கள். விரும்பியவர்கள் விலகிப் போனார்கள். ஆனால் இனி உன்பாளுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் நல்ல அருமையான நிலை உண்டாகக்கூடிய ஒரு நேரம் தான் இது. 

கடக ராசிகாரர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடியவங்களுக்கு பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வீர்கள். அதே நேரத்தில் வரக்கூடிய காலகட்டங்களில் உடன்பிறப்புகிடம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க வேண்டியது முக்கியம். ஏனென்றால் உங்கள்கிரகங்களுடைய அமைப்புக்கள் ஹை லெவல்லில் இருக்கிறது. 

எனவே உங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. எனவே இந்த வளர்ச்சியை பார்க்கும் போது மற்றவர்கள் பார்வை உங்கள் மேல் விழும். அதனால் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்கக்கூடிய நிலைமைகள் ஏற்படும். எனவே அனைத்து விவகாரங்களையும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

அரசியல் துறையில் இருப்பவர்கள் மாபெரும் மாற்றங்களை சந்திக்க போகிறீர்கள். அதேபோல சினிமா துறையில் நல்ல மாற்றங்கள் பிறக்கும். ரொம்ப நாள் பட்ட கஷ்டத்துக்கு உண்டான பலன் கிடைக்கப்போகிறது. பைனான்ஸ் சார்ந்த துறையில் நல்ல வளர்ச்சிக்குரிய பாதையில் பயணம் செய்வீர்கள். 

சிரமங்களில் இருந்து மீண்டு வெளியில் வரப்போகிறீர்கள். உங்க மேல் சுமத்தபப்ட்ட வீண் பழிகளும் அவமானங்களையும் சரி செய்து மீண்டும் உங்களுக்கு ரீ என்ட்ரி தரக்கூடிய அருமையான காலகட்டமாக இது இருக்கப்போகுது. நினைச்சதை முடிப்பீர்கள். உங்களுடைய இலக்கை நீங்கள் அடைய போறீகிறீர்கள். 

ஆரோக்கிய ரீதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் சரியாகி நல்ல மேன்மை அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கிற பிரச்சனி தீர்ந்து ஒன்றிணைந்து வாழ்வீர்கள். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். எனவே இந்த காலகட்டத்தை சரியா பயன்படுத்தினால் பெரிய அளவில் பலன் அடைவீர்கள். 

மேலும் படிக்க - Astro: ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட பலன்களை பெறும் ராசிகளும்

மேலும் படிக்க - சூரியனில் சனி பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு

மேலும் படிக்க - வார ராசி பலன் மார்ச் 16 முதல் 22 வரை: இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News