)
Guru Nakshatra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் தவிர, கிரகங்களின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் எற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. இந்த மாற்றங்களால் சில ராசிகளில் நல்ல பலன்களும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
குரு நட்சத்திர பெயர்ச்சி
குரு அறிவு, செழிப்பு, செல்வம், திருமணம் மற்றும் அதிர்ஷ்டத்தின் கிரகமாகக் கருதப்படுகிறார். சுப கிரகமான குரு பகவான் தற்போது புனர்பூசம் நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் உள்ளார். குரு ஆகஸ்ட் 30, 2025 அன்று புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைவார். இது ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது.
குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு லாபம் அதிகர்க்கும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சியால் ஜாக்பாட் நன்மைகளை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
குரு நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும். இந்த நேரத்தில், நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். முதலீட்டிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நேரமாக இது இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
கடகம் (Cancer)
புனர்பூச நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
கன்னி (Virgo)
குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு வணிகத்தில் விரிவாக்கம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மேம்படும், சமூக கௌரவம் அதிகரிக்கும்.
தனுசு (Sagittarius)
புனர்பூச நட்சத்திரத்தில் குருவின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். வேலை, வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம் (Pisces)
மீன ராசிக்காரர்களுக்கு, நிதி ரீதியாக வலுவடையும் நேரமாக இது இருக்கும். முதலீடு மற்றும் சேமிப்பில் அதிகரிப்பு இருக்கும். வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொட வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பொருளாதார நிலை வலுவடையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ